~

கோட்டா இந்தியாவையும் ஏமாற்றி தாய்நாட்டை அணு குழியில் தள்ளினார்..! அணு ஆயுத திட்டத்திற்கு கச்சதீவு சீனாவிற்கு..! போட் சிட்டியில் மேலும் 400 ஏக்கர் சீனாவிற்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2019 நவம்பர் 30 பிற்பகல் 08.15) கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றது இந்தியாவை ஏமாற்றி சீனாவுடன் இணைந்து இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப முடியாதவாறு அணு ஆயுத திட்டத்திற்கு வழிவகுக்கும் நோக்கிலென லங்கா ஈ நியூஸ் நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் தகவல் வழங்க விரும்புகிறது.

இலங்கையின் வட பகுதியில் இந்தியாவிற்கு அருகில் உள்ள கச்சத்தீவு பகுதியை வியாபார நோக்கத்திற்கு அல்லாமல் இராணுவ அணு  ஆயுத செயற்பாடுகளுக்கு சீனாவிற்கு வழங்கவும் அதேபோன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் மேலும் 400 ஏக்கர் கடற் பரப்பை சீனாவிற்கு காணி உறுதியுடன் வழங்குவதற்கும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலை சீனா கோட்டாபய ராஜபக்ஷவிற்கு குறைவில்லாமல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பணம் செலவிட்டதாக தெரியவருகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெற்று 18 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து 21ம் திகதி வியாழக்கிழமை சீனா இது தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. சீன மத்திய அரசின் முதுகெலும்பாக கருதப்படும் Dongfang Electric Corporation (DEC) என்ற அணு சக்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவுடன் ஸ்ரீலங்கா கடற்படை அதிகாரிகளை  இணைத்துக் கொண்டு கடந்த 21ஆம் திகதி கச்சத்தீவு பிரதேசத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு சுற்றுலா சென்றுள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் மனிதர்கள் எவரும் வாழ்வாதார நோக்கோடு தங்கியிருக்கவில்லை என்பதோடு அங்கிருக்கின்ற பிரபல கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு மாத்திரம் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் சென்று வருவது வழக்கமாக உள்ளது. கச்சத்தீவில் அணு ஆயுத திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அங்கு மனிதர்கள் செல்வதற்கு அனுமதி முற்றாக தடை செய்யப்படும்.

தாங்கள் கச்சத்தீவில் சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கும் திட்டத்தின் மூலம் அணுசக்தி ஊடாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதே நோக்கமென இந்த செய்தியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அறிவிப்பை விடுக்கக்கூடும். ஆனால் இந்த திட்டத்தின் பின்புலத்தில் உள்ளது வேறு நோக்கமாகும். அதன் காரணமாகவே இத்திட்டத்தை இரகசியமாக முன்னெடுக்க ராஜபக்சே அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர் அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர் ஒருவரை அழைத்து தனது இந்திய பயணத்தின் முன்னர் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தான் இந்திய சார்பு நிலையை கடைப்பிடிப்பதாக இந்திய உயர் அதிகாரிகளுக்கு காட்டிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ஆரம்பித்தார்.

கச்சத்தீவில் சீனாவின் தலையீட்டில் அணு ஆயுதத் திட்டம் ஆரம்பிப்பது அருகிலுள்ள இந்தியாவிற்கு மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதோடு கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் மேலும் 400 ஏக்கர் கடற்பரப்பு சீனாவிற்கு வழங்கப்படுவது ஆசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மென்மேலும் வலுவடையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய்நாட்டை கட்டி எழுப்ப முடியாதவாறு இலங்கை சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக மாறிவிடும்.

கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தில் அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில் செயல்பட்ட போதும் ஐரோப்பிய புலனாய்வு பிரிவை திசை திருப்ப முடியாமல் போய்விட்டது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐரோப்பிய நாடுகள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காமைக்கு இது பிரபல காரணம் என லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.

அலுவலக செய்தியாளர் 

---------------------------
by     (2019-12-01 06:34:31)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links