(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 05 பிற்பகல் 06.00) எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
இன்று (05) மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தவில் இடம்பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயல்படுவார். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து செயல்பட வேண்டுமென முன்னணியின் கட்சித் தலைவர்கள் பலர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயல்படுவார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ செயல்படுவார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற சுவிஸ் தூதரக பெண் உத்தியோகத்தர் கடத்தல், இணையதள ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மை, ரகசிய போலீஸ் பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் இடமாற்றம் என்ற பெயரில் பழி வாங்கப்படுகின்றமை போன்ற விடயங்களை முன்னிறுத்தி புதிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது செயற்பாடுகளை முன்னெடுப்பாரா என மக்கள் அவதானித்து வருகின்றனர். இலங்கையின் மத்திய தர பிரிவினர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்ளாமையே அவரது தோல்விக்கு காரணமாகும். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றவுடன் அந்த சவாலை சந்தித்து சஜித் பிரேமதாச எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
---------------------------
by (2019-12-05 13:24:27)
Leave a Reply