(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 06 பிற்பகல் 03.30) முஸ்லிம் அடிப்படைவாத தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் 'நாட்டின் தேசிய பாதுகாப்பு நலிவடைந்துள்ளது அதனை வலுப்படுத்த என்னால் மட்டுமே முடியும்' என்று கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டினுடைய தேசிய புலனாய்வு சேவை பிரிவின் உயர் பதவியான அதாவது தேசிய புலனாய்வு பணிப்பாளராக (Director NIS) பிரபல முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரிகேடியர் டீ. சுரேஷ் சாலி என்பவரை நியமித்து உள்ளார்.
சஹ்ரானின் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் அது தொடர்பில் சரியான முன்னெச்சரிக்கை தகவலை கொடுத்தது இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு பணிப்பாளர் பதவியிலிருந்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் என்ற போலீஸ் ரகசிய பரிசோதகர் ஆவார். 'ஐஸ் ஒன்லி' என்று குறிப்பிடப்பட்ட குறித்த முன்னெச்சரிக்கை கடிதத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு தெரியப்படுத்தி இருந்ததுடன் தனது முன்னெச்சரிக்கை குறித்து இவர்கள் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போது சிசிர மெண்டிஸ் சாட்சி அளித்திருந்தார்.
தற்போது அந்த பதவிக்கு பிரிகேடியர் சுரேஷ் சாலி என்ற முஸ்லிம் நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தில் இருக்கின்ற புதுமையான விடயம் என்னவென்றால் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத், பொதுபல சேனா, ஹிந்து சேனா, ஆவா குழு போன்ற இனவாத அடிப்படைவாத மதவாத குழுக்களை உருவாக்குவதற்கு பின்னணியில் இருந்து மகிந்த ராஜபக்ச யுகத்தில் செயல்பட்டவர் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சாலி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
சுரேஷ் சாலியை தேசிய புலனாய்வு பிரதானியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சாலி பதவியேற்ற பின்னர் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம் செயலிழப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர் இயந்திரத்தை நல்லாட்சி அரசாங்கமே அறிமுகப்படுத்தியது. கன்டேனரை செயலிழக்க செய்தமைக்கு அபூர்வமான காரணம் ஒன்றை முன்வைத்துள்ளனர். ஸ்கேனர் இயந்திரம் கொள்வனவு செய்யப்படும் போது முறைப்பாடுகள் இடம்பெற்றதாகவும் ஸ்கேன் செய்வதன் மூலம் காலதாமதம் ஏற்படுவதாக காரணம் கூறியே குறித்த ஸ்கேனர் இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யாமல் நாட்டுக்குள் வெளிநாட்டிலிருந்து கன்டேய்னர்களை அனுமதிப்பது பாதுகாப்பை உறுதிபடுத்துமா? அல்லது பாதுகாப்பை இல்லாத செய்யுமா? என்பதை முஸ்லிம் நபரொருவரை தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக நியமித்த அமெரிக்க பிரஜையே கூற வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் தரப்பிலிருந்து ஒருவரை தேசிய புலனாய்வு பணிப்பாளராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி நிச்சயம் கருத்து தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லையேல் 'தெங் செப்பத' (இப்போது சுகமா) என்று மக்களை நோக்கி கேள்வி கேட்க நேரிடும்.
---------------------------
by (2019-12-07 14:46:49)
Leave a Reply