(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 10 பிற்பகல் 07.00) கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி அளுத்கம பிங்ஹேன பிரதேசத்தில் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்ற 'ரத்தரங்' என்பவரின் பின்புலத்தில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு 20,000 லீட்டர் கோடா மீட்கப்பட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ரத்தரங் என்பவரின் 'தங்க இல்லம்' பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டதன் காரணமாக வியாபாரிகள் பலர் ஆத்திரம் அடைந்தனர். இவருடைய பிரதான எதிரியாக இருந்தது இந்த விற்பனை தொடர்பான செய்தியை அம்பலப்படுத்திய பிரதேச செய்தியாளர் துசித குமார சில்வா என்பவர் ஆவார்.
"எமது அரசாங்கம் வந்த பின் உனக்கு பதில் தருகிறோம்" என்று குறித்த செய்தியை அம்பலப்படுத்திய பிரதேச ஊடகவியலாளர் துசித்தவிற்கு அப்போது சிலர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். நவம்பர் 16ஆம் திகதி இவர்கள் கூறிய 'எமது அரசாங்கம்' களனி விகாரை நாக மாணிக்கம் மற்றும் சத்துர சுதேஷ் போன்றவர்களின் ஆசிர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்தது. ரத்தரன் போன்றவர்கள் துசித்த என்பவரை அன்று அச்சுறுத்தியது போன்று கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் திகதி அதனை செயல்படுத்தி காட்டியுள்ளனர்.
குறித்த பிரதேச ஊடகவியலாளர் துசித குமார சில்வா மற்றும் அவருடைய மனைவி அனுஷா குமாரி ஆகியோர் துவிச்சக்கர வண்டி மூலமாக அளுத்கம தர்கா நகரில் இருந்து எல்பிட்டிய பிங்ஹேன பகுதியிலுள்ள அவர்களது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது குண்டர் குழுவால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் குறித்த பிரதேச ஊடகவியலாளரின் விடும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலை 5 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த துசித்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை நிலை நிறுத்தி ஆட்சி புரிவதாக அதிகாரத்திற்கு வந்த போதும் அது அவரது குடி உரிமை விடயத்தில் கூறிய பொய் போலாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தனது குடும்பத்திற்கு எதிராக ஊழல் மோசடி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகரவை பழி வாங்கி அவரை பதவி நிலை குறைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்தனர். அதன் பின்னர் தமக்கு எதிராக செய்திகளை வெளியிட்டதாக கூறி நியூஸ் ஹப் செய்தி இணையத்தள அலுவலகத்திற்குள் புகுந்து அடாவடி செய்தனர். பின்னர் வொயிஸ் டியூப் இணைய ஊடகவியலாளரிடம் விசாரணை நடத்தினர். அதே வரிசையில் தற்போது பிரதேச ஊடகவியலாளர் துசித குமார சில்வா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஊடகவியலாளர்கள் தற்போது கழுத்தைப் பிடிக்க வேண்டிய இருவர் உள்ளனர். ஊடகவியலாளர் சத்துர அல்விஸ் மற்றையவர் ஊடகவியலாளர் சுதேஷ் ஆகிய மோசடி ஊடகவியலாளர்கள் ஆவர். உண்மையை பொய்யாக்கி காலை தொடக்கம் இரவு வரை மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரங்களை செய்து கோட்டாபய ராஜபக்சவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்த இவர்கள் தற்போது ஊடகவியலாளர்கள் எதிர் கொண்டு இருக்கின்ற அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கு நிச்சயமாக பொறுப்புக்கூற வேண்டும்.
பிரதேச ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களை ஊடக அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளதோடு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அளுத்கம நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
---------------------------
by (2019-12-11 13:00:58)
Leave a Reply