எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 12 பிற்பகல் 09.35) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வருகின்ற அரச நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலையும் 27ஆம் திகதி வெளியான அமைச்சர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சியில் அரசியல் யாப்பை நீதி செயல்பட்டு வருவதாக சிரேஷ்ட சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கூறிய இரண்டு வர்த்தமானி அறிவித்தல் களையும் கீழுள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் - http://www.documents.gov.lk/files/egz/2019/11/2151-38_T.pdf
அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் அதற்கான பொறுப்புக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் - http://www.documents.gov.lk/files/egz/2019/12/2153-12_T.pdf
அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் பின்னர் நியமிக்கப்படும் ஜனாதிபதிக்கு அமைச்சரவைக்கு தலைமை தாங்க முடியுமே தவிர அவரால் எந்தவித அமைச்சர்களையும் பொறுப்பு வகிக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சை கூட ஜனாதிபதி தனக்கு கீழ் வைத்திருக்க முடியாது. அது தொடர்பில் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் 51வது பிரிவில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றமை தொடர்பில் நவம்பர் 21ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு அமையவே வெளியிடப்பட்டுள்ளது. "இரண்டாயிரத்து பத்தொன்பது நவம்பர் மாதம் 18ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 'ஜனாதிபதி பதவியை' பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியுடன் சேர்த்து தேசிய பாதுகாப்பு அமைச்சையும் பொறுப்பேற்பதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்படவில்லை. குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதோ http://www.documents.gov.lk/files/egz/2019/11/2150-41_T.pdf )
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அதிலும் பாதுகாப்பு அமைச்சை அவருக்கு பொறுப்பு வழங்கியதாக குறிப்பிடப்படவில்லை. குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதோ - http://www.documents.gov.lk/files/egz/2019/11/2151-18_T.pdf )
அதன் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் யார் யார் என்பதை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலிலும் பாதுகாப்பு அமைச்சர் எவரும் பெயரிடப்படவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் இல்லை. அதனை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்ட அமைச்சுகளுக்கான பொறுப்பு மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாப்பு அமைச்சு என கூறப்பட்டு அதன் கீழ் 31 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்குள்ள பிரச்சனை பாதுகாப்பு துறைக்கு அமைச்சர் ஒருவர் இல்லாமல் அந்த அமைச்சை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதாகும்.
குறிப்பிட்ட அமைச்சு ஒன்றுக்கு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட விட்டால் அந்த அமைச்சு நேரடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படும் என்ற பழைய சட்டமும் தற்போது வழக்கில் இல்லை. அந்த நடைமுறை பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதி தனக்குக் கீழ் எந்த ஒரு அரச நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கு அரசியல் யாப்பில் இடமில்லை. கோட்டாபய ராஜபக்ஷவும் இது குறித்து நன்கு அறிவதால் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியாக மாத்திரமே பதவி ஏற்றதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிடுகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தனக்குக் கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சரை தனக்குக் கீழ் கொண்டு வந்து அதனைச் ஏற்படுத்தியதாக கூறினார்மைத்திரிபால சிறிசேனவிற்கு அவ்வாறு தனக்குக் கீழ் அமைச்சு ஒன்றை கொண்டுவந்து அதற்கு கீழ் அரசு நிறுவனங்களை செயல்படுத்தும் அதிகாரம் இருந்த போதிலும் அதன் பின்னர் வருகின்ற ஜனாதிபதி அதாவது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவ்வாறானதொரு அதிகாரம் அரசியல் யாப்பில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுருக்கமாகக் கூறுவதானால் 'உணவு ஒன்றை விழுங்குவதால் அதனை பொறுப்பேற்றுக் கொள்ள வயிறு இருக்க வேண்டும். வயிறு இல்லாமல் உணவை விளங்குவது எங்கு அனுப்ப?. எனவே தற்போதைய ஜனாதிபதிக்கு வயிறு இல்லாமல் உணவு விழுங்குவதைப் போல அமைச்சு ஒன்று இல்லாமல் நிறுவனங்களை தன்வசப்படுத்திக் கொள்ள முடியாது.
அதன்படி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழான நிறுவனங்களை ஜனாதிபதி தனக்கு கீழ் வைத்திருக்க முடியாது.
அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இன்றி பாதுகாப்பு செயலாளர் ஒருவரையும் நியமிக்க முடியாது. அதன்படி பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் உத்தரவுகளும் சட்டவிரோதமானதே. அதன்படி கோட்டாபய ராஜபக்ச தற்போது முன்னெடுத்து செல்வது யாப்பு விரோத சட்ட விரோத ஆட்சியாகும். அப்படி இன்றேல் இது அவருடைய வழமையான சாக்கு விளையாட்டாகும்.
இது மிகத் தெளிவாக யாதேனும் ஒரு நபரால் அல்லது குழுவால் உயர் நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை. ஜனாதிபதிக்கு வரப்பிரசாதங்கள் இருந்தாலும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி யாப்பு விரோத சட்ட விரோத ஆட்சி ஒன்றை முன்னெடுத்துச் செல்கிறார். இது உண்மையில் ஒரு அராஜக நிலையாகும்.
எதிர்க் கட்சியில் உள்ள தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் அவரை சுற்றியுள்ள நபர்கள் தங்களுக்கான பதவிகள் தொடர்பில் அடித்துக் கொள்வதை ஒரு பக்கம் வைத்துவிட்டு நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத அராஜக ஆட்சியில் இருந்து மக்களை மீட்டெடுக்க இனியாவது செயல்பட வேண்டும்.
---------------------------
by (2019-12-12 17:46:17)
Leave a Reply