~

சட்டம் நாய்க்கு..! சம்பிக்கவின் சாரதிக்கு பதிலாக தாய், மனைவி பால் குடிக்கும் கை குழந்தை கடத்தல்..!! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 16 பிற்பகல் 10.15) கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான எம். திலும் துசித குமார என்பவருக்கு பதிலாக அவரது தாய், மனைவி மற்றும் பால் குடிக்கும் கை குழந்தை ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர். 15ஆம் திகதி நள்ளிரவு 12.45 மணி அளவில் காலி இமதுவ பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்ற அஜித் மெத்தானந்த என்ற போலீஸ் அதிகாரி குறித்த நபர்களை 64 - 8736 என்ற வாகனத்தில் கடத்திக் கொண்டு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பத்தரமுல்ல ஜயந்திபுற வீட்டிற்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி வரும்வரை தடுத்து வைத்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான சிரால் லக்திலக பகிரங்கப்படுத்தியதன் பின்னர் அன்றைய தினம் மாலை கடத்தப்பட்ட மூவரும் மீண்டும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை வேட்டையாட முயற்சிக்கும் இந்த வாகன விபத்து நடைபெற்றதன் பின்னர் அது தொடர்பான விசாரணை இடம்பெற்று சாரதிக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது. ஒரே குற்றத்திற்கு இரண்டு தடவைகள் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இன்று வரையில் எந்தவிதக் குற்றம் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க அல்லது அவரது சாரதிக்கு போலீசாரிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. எனினும் நீதிமன்றம் இந்த இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது. அன்று இடம்பெற்ற வாகன விபத்தின் புகைப்படத்துடன் மக்கள் கேள்வி எழுப்பும் பதிவொன்று இங்கே காணப்படுகிறது.

இந்த சம்பவத்தின் கடுமையான போக்கினை வெளிப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அஜித் பீ பெரேரா நடத்திய ஊடக சந்திப்பின் விபரம் கீழே உள்ளது 

---------------------------
by     (2019-12-17 14:23:14)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links