(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 24 பிற்பகல் 12.30) சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி வாகன விபத்து ஒன்றை பொது சொத்து சேதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க பொலிசார் மேற்கொண்ட மிக கீழ்தரமான முயற்சி முறியடிக்கப்பட்டு சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இன்று உத்தரவிட்டார்.
அதன்படி 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் ரூபா இரண்டு சரீரப் பணிகளிலும் சம்பிக்க ரணவக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தை சுற்றி அதிக போலீஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சம்பிக்க ரணவக்கவின் பிள்ளைகள் மனைவி போன்றவர்கள் கூட நீதிமன்றத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. எனினும் சம்பிக்க ரணவக்கவின் உதவிக்கு சக அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர்.
இதேவேளை சம்பிக்க ரணவக்கவை சட்டவிரோதமாக கைது செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு
---------------------------
by (2019-12-25 04:39:39)
Leave a Reply