(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 26 பிற்பகல் 03.00) உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜெயவர்தனவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதித் துறையில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
63 வயதுடைய நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன மிகவும் தேக ஆரோக்கியத்தோடு இருந்ததுடன் உற்சாகமாக பணியாற்றியதுடன் உயர் நீதிமன்றில் நேர்மையாக நின்று தீர்ப்புகளை வழங்கிய திறமையான நீதிபதி ஆவார். இவருக்கு சாதாரண காய்ச்சல் காணப்பட்டது. அதற்கென இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இதன்போது நீதியரசருக்கு லியூகேமிய என்று சொல்லப்படுகின்ற சிவப்பு ரத்தம் வெள்ளை இரத்தமாக மாறும் நோய் காணப்படுவதாக வைத்தியர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நாள் மாத்திரம் சிகிச்சை பெற்றுவந்த நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எனினும் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என சட்டத்துறையில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 63 வயதான ஒருவர் லியூகேமிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது நம்பிக்கையற்ற விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் லியூகேமியா என்பது ஒரே நாளில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் அல்ல என அவர்கள் கூறுகின்றனர்.
அண்மைய நாட்களில் இங்கிலாந்தில் இவ்வாறான மரணங்கள் சில ஏற்பட்டன. ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்று இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய இராணுவ வீரர்கள் சிலர் இவ்வாறு திடீரென உயிரிழந்தனர். ரஷ்யாவில் இருந்து வந்த இரகசியம் ஒற்றர்கள் மூலம் இராணுவ வீரருக்கு கொடிய விஷம் உடம்பில் தடவப்பட்டுள்ளதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இந்த கொடிய விஷம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதனைப் பார்ப்பதற்கு விசேட கேமரா உபகரணங்கள் தேவை. இது ரஷ்ய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரது வீட்டின் கதவில் காணப்பட்ட திறப்பு பக்கத்தில் இந்த விஷயம் தடவப்பட்டுள்ளது. இவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் தடவப்பட்ட கொடிய விஷத்தை தொட்டு சில நிமிடங்களில் குறித்த நபருக்கு உடம்பில் பலன் குறைந்து நோய்வாய்பட்டார். இவ்வாறு நோய்வாய்ப்பட்டு கீழே விழுந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் சரியாக இனங் காணப்படாததால் இரத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த விடயம் குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது இந்த கண்ணுக்கு தெரியாத கொடிய விஷம் குறித்து கண்டறியப்பட்டது. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றவாளியாகக் கருதப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
எனவே ஏதேனும் ஒரு மர்ம குழு கொடிய விஷத்தை உயர்நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன உடம்பில் தடவி உள்ளார்களா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணை தொடர்பான பொறுப்பு திருடர்களுக்கு உதவி செய்யும் திருட்டுக் கும்பலிடம் கையளிக்கப்படாமல் திறமையான நேர்மையான அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்கள் குறுகிய சிலரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அடங்குகிறார்.
---------------------------
by (2019-12-27 00:50:30)
Leave a Reply