(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 05 பிற்பகல் 06.10) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்புக்கான துப்பாக்கியின் அனுமதிப் பத்திரம் காலாவதியான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தலா 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வருடாந்த துப்பாக்கி அனுமதிப் பத்திரம் காலாவதியான காரணத்திற்காக வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதித்துள்ளமை எந்த சட்டத்தின் கீழ் என்பது தெரியவில்லை. நபர் ஒருவர் வாகன அனுமதிப் பத்திரம் காலாவதியான காரணத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டால் அவரது வெளிநாட்டு பயணம் தடை செய்யப்படுமா என்பதை நீதிபதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டிலிருந்து ஆபாச படங்கள் அடங்கிய டிவிடி மீட்கப்பட்டதாக குடு ஊடகம் செய்தி வெளியிட்டது. ரஞ்சன் ஒரு நடிகர். திரைப்பட தயாரிப்பாளர். இயக்குனர். ஐம்பது வயதைத் தாண்டிய முதியவர். எனவே ரஞ்சன் ராமநாயக்க ஆபாச திரைப்படம் பார்த்தால் அதன் மூலம் ராஜபக்ஷக்களுக்கு வயிற்றோட்டம் போகுமா என்பதை போலீசாரும் குடு ஊடகமும் தெளிவுபடுத்த வேண்டும்.
ரஞ்சன் திருமணம் முடிக்காமல் தனியாக இருக்கும் ஒருவர் என்பதால் அவரது வீட்டில் இரட்டை படுக்கை கட்டில் காணப்படுவது ஏன் என போலீசார் வினவியுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக கைது செய்து விளக்கமறியலில் வைத்தது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அல்ல. ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெருமவை. அதற்கு காரணம் தேர்தல் வெற்றியின் பின்னர் பாலித்த தெவரப்பெரும சண்டி தனமாக நடந்து கொண்டதனாலாகும். எனினும் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர்களை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்தது சிறிய குற்றச்சாட்டுகளுக்கு அல்ல. அனைத்தும் பாரிய லட்சக்கணக்கான நிதி மோசடிகள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகவே.
எனினும் நந்தசேன மிகவும் அவசரப்பட்டு சம்பிக்க ரணவக்கவை வேட்டையாடியமை நான்கு வருடங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்ட வாகன விபத்து வழக்கு ஒன்றை மீள தோண்டி எடுத்தாகும். ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய காரணத்தால் ராஜித சேனாரத்ன நந்தசேனவால் வேட்டையாடப்பட்டார். தற்போது துப்பாக்கி அனுமதிப்பத்திரம் காலாவதியான காரணத்தால் ரஞ்சன் ராமநாயக்கவை வேட்டையாடுகிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் 5 சதத்துக்கு விலை மதிப்பற்றவை. ஆனால் இந்த மூவருக்கும் வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சில தகவல்கள் அறிந்தவர்கள் வெளிநாடு செல்வதால் நந்தசேன கோட்டாபய அச்சம் அடைகிறார் என்பது தெளிவாகிறது.
சிறிசேன ஜோக்கராக வருவதற்கு முன்னர் நந்தசேன ஜோக்கராகிவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.
---------------------------
by (2020-01-05 13:41:29)
Leave a Reply