~

கப்பம் கோரி 11 மாணவர்களை கடத்தி கொலை செய்த வழக்கை திரிபுபடுத்தி நீதிமன்ற சம்பிரதாயத்தை உடைத்து சட்டமா அதிபர் தப்புல பிரதம நீதியரசருக்கு அழுத்தம்..! தப்புல நந்தசேனவின் கை பொம்மை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 08 பிற்பகல் 03.40) மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படையின் 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை திரிபுபடுத்தி சந்தேகநபர்களை விடுவித்துக்கொள்ள சட்டமா அதிபர் தப்புல லிவேரா நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறி பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் உள்ளக பிரிவுக்கு செய்தி வந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 2009 மார்ச் 21 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஆறு சந்தர்ப்பங்களில் கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படையின் 14 உறுப்பினர்களுக்கு எதிராக 678 குற்றப்பத்திரிகை விசேட 3 நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மூன்று நீதிபதிகளை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் தப்புதல் லிவேரா கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது 2019 நவம்பர் 13ஆம் திகதி கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சாதாரண நீதிமன்ற சம்பிரதாயத்தின் படி குறித்த நீதிபதிகளை பெயரிடும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு உள்ளதுடன் அதற்காக சட்டமா அதிபர் எழுத்து மூலம் கோரிக்கை முன் வைப்பார். இந்த செயற்பாடுகளை பூர்த்திசெய்ய இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படும்.

ராஜபக்சவின் ஆட்சி காலங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு பொறுப்புக்கூற வேண்டிய நந்தசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மேற்கூறிய கடத்தல் வழக்கில் இருந்து சந்தேக நபர்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கில் நந்தசேனவால் சட்டமா அதிபர் தப்புலவிற்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக சட்டமா அதிபர் நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறி அண்மையில் பிரதம நீதியரசருக்கு மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி குறித்த வழக்கு விசாரணைக்கு 3 நீதிபதிகளை நியமிப்பதற்கு பதிலாக ஜூரி சபை ஒன்றை பெயரிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து பின்னர் அதனை மீண்டும் மாற்றுவது நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயலாகும்.

இதன் மூலம் ஜனாதிபதி நந்தசேனவின் எதிர்பார்ப்பு காணாமல் செய்யப்பட்ட இளைஞர்கள் 'தமிழ் முஸ்லிம்கள்' என்பதால் இந்த விடயத்தில் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் 'இராணுவ வீரர்கள்' என்பதால் சிங்கள ஜுரி சபை ஒன்றை பெயரிட்டு அதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சந்தேக நபர்களை விடுவித்துக் கொள்வதாகும்.

இந்த விடயத்தை செயற்படுத்த ஜனாதிபதி நந்தசேனவிற்கு உதவி செய்தது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு இணைக்கப்பட்ட தப்புல லிவேராவின் தங்கப் பெண் நிசாரா ஜயரட்ன மற்றும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இராணுவ சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனக பண்டார ஆகியோராவர்.

ரவிராஜ் படுகொலை வழக்கிலும் முழு சிங்கள ஜூரி சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு வழக்கு நள்ளிரவு வரை விசாரணை செய்யப்பட்டு இறுதியில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இறுதியில் ரவிராஜ் கொலையாளிகள் எவரும் இனங் காணப்படவில்லை.

ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் 22 ஆவது யாப்புத் திருத்தத்தினை கொண்டுவருவதற்கு தடுமாறுவது நீதிமன்றத்தை தனக்குத் தேவையான வகையில் ஆட்டுவிக்கும் நிலைக்கு கொண்டு வருவதன் நோக்கம் ஆகும்.

---------------------------
by     (2020-01-08 15:03:07)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links