(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 08 முற்பகல் 08.00) ரஞ்சன் ராமநாயக்கவின் முட்டாள் நாடக அரசியலால் மிகவும் திறமையான இரகசிய பொலீஸ் பரிசோதகர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர பணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வெளி நபருடன் கருத்துப் பரிமாறிக் கொண்டமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர உள்ளிட்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் சிலருடனும் நீதிபதிகள் சிலருடனும் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் லட்சக் கணக்கில் போலீசாரிடம் சிக்கி உள்ளன. இதில் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் லங்கா ஈ நியூஸ் இணையதளத்திற்கு மாத்திரம் சுமார் 20க்கும் மேற்பட்ட குரல் பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க என்பவர் எந்த அளவு முட்டாள் மடையன் என்பது தெளிவாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் மூலம் வெளியாகி உள்ள தகவல்கள் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு மூலமாகவும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு மூலமாகவும் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க தொழில் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
இந்த குரல் பதிவுகளின் அடிப்படையில் சிறந்த பொலீஸ் அதிகாரி சானி அபேசேகரவை கைது செய்து விளக்கமறியலில் வைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இதே நிலை சில நீதிபதிகளுக்கும் ஏற்படக் கூடும் எனவும் தெரிய வருகிறது.
இதேவேளை இந்த குரல் பதிவுகளை போலீசாரிடம் சிக்க வைத்தது ரஞ்சன் ராமநாயக்க வின் சதி வேலை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க தனது வாய் மூலம் பல தேவையற்ற விடயங்களை பேசியுள்ளாரே தவிர ஊழல் ஒழிப்பதற்கு எவ்வித போராட்டங்களையும் அவர் செய்யவில்லை. அதற்கு பதிலாக திறமையான சிறந்த நபர்கள் காட்டி கொடுக்கப்பட்டுள்ளனர். ரஞ்சன் ராமநாயக்க போன்ற முட்டாள் மடையர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
---------------------------
by (2020-01-08 15:08:39)
Leave a Reply