(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 12 பிற்பகல் 06.25) நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ராஜபக்ச காட்டாட்சி யுகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதா என்று ஆராய்வதற்காக மூன்று முக்கிய திருடர்கள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நந்தசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் நியமிக்கப்பட்ட ஊழல் விரோத பிரிவு, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் விசேட நிதி மோசடி பிரிவு மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு ஆகிய நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி நந்தசேனவால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களின் நடவடிக்கைகளால் யாரேனும் நபருக்கு பாதிப்பு அநீதி ஏற்பட்டுள்ளதா? குறித்த நிறுவனங்கள் யாரேனும் நபரின் அழுத்தங்களின் பிரகாரம் செய்யப்பட்டுள்ளதா? அரசியல் பழிவாங்கலின் போது ஊழல்கள் இடம்பெற்றனவா? போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்ய உள்ளது.
கடந்த 9ஆம் திகதி இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றதாகவே கூறப்பட்டுள்ளது. "..எந்த ஒரு சட்டம் எந்த ஒரு பொறுப்புக்களின் போது குறித்த நபர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படும் போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் தவறான முறையில் பயன்படுத்துதல் ஊழல் அல்லது மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதா.." போன்ற பதங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இதன் மூலம் அரசியல் ரீதியாக பழிவாங்கல் இடம்பெற்றுள்ளது என்ற நிலையிலிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
நந்தசேனவின் உலக சாதனை..
இதில் உள்ள மிகவும் புதுமையான விடயம் என்னவென்றால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு போன்ற பாராளுமன்றத்தில் யாப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபயவினால் தான்தோன்றித்தனமாக நியமிக்கப்பட்ட மூன்று முக்கிய திருடர்கள் உள்ளடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு ஒன்று தவறு செய்துவிட்டதாக ஆராய்வதற்கு மற்றும் ஒரு ஆணைக்குழுவை நியமித்து நந்தசேன கோட்டாபய உலக சாதனை புரிந்துள்ளார்.
ஜனாதிபதி நந்தசேன கோட்டாபாயவினால் அமைக்கப்பட்டுள்ள புதிய அபூர்வமான ஆணைக் குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன (தலைவர்), ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
பைத்தியக்காரப் பூனை..
உபாலி அபேரத்ன நீதிபதியை நீதிமன்றத் துறையில் உள்ளவர்கள் 'பிஸ்சு பூசா' (பைத்தியக்கார பூனை) என்ற பட்ட பெயர் கொண்டு அழைப்பர். உபாலி அபேரத்ன என்பவர் மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு ஆயத்தமான நிலையில் சட்ட விரோதமான முறையில் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட நீதிபதி ஆவார். உயர்நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் மாத்திரமே இருக்க வேண்டிய நிலையில் மஹிந்த ராஜபக்ஷவினால் பன்னிரண்டாவது நீதிபதியாக உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டார். அதனாலேயே இதனை சட்டவிரோதம் என்று கூறுகிறோம். அத்துடன் உபாலி அபேரத்னவைவிட தகுதியானவர்கள் இருவர் முன்னிலையில் இருந்த போதும் அவர்களை பின் தள்ளிவிட்டு மகிந்தராஜபக்ச இவரை நீதிபதியாக நியமித்ததன் காரணம் உபாலி மஹிந்த ராஜபக்சவின் கைக்கூலி என்பதனாலாகும். இதற்கு உதாரணம் உபாலி அபேரத்னவின் மகளது திருமணத்திற்கு சாட்சி கையொப்பமிட வந்தது மகிந்த ராஜபக்ச ஆவார். உண்மையான ஒழுக்கமுடைய நீதிபதிகள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுப்பது இல்லை.
லட்சம் உண்ணி..
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜயதிலக்க என்பவர் நீதிபதி ஆசனத்தில் இருந்து கொண்டு லஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்டவர். வழக்கு ஒன்றில் சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக சுமார் 2.5 மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக சந்திரசிறி ஜயதிலக்க மீது முறைப்பாடு செய்யப்பட்ட போதும் அரசியல்வாதிகளின் துணையுடன் அவர் தப்பித்துக் கொண்டார். குறித்த விடயத்தில் நீதிமன்றத்தில் பணிபுரியும் நபர்களிடமும் இவர் லஞ்சம் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சந்திரசிறி ஜயதிலக்க நீதிமன்றத்திற்குள் வைத்து பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் ரீதியான பிரச்சனை ஒன்றிலும் மாட்டிக் கொண்டவர். நீதிமன்றத்தில் பணிபுரியும் கிருஷாந்தி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் குறித்த பெண்ணின் கணவர் விவாகரத்து பெற்றதும் இந்த நீதிபதி சந்திரசிறியினால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபரும் உறுப்பினர்..
நந்தசேனவின் அபூர்வமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ உள்ளார். இவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தின்போது நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் பொலிஸ்மா அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆவார். சந்திரா பெர்னாண்டோ என்பவர் மஹிந்த ராஜபக்சவின் பாடசாலை நண்பர். கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் ஆயுத பொருட்களை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தப்பிக்க முயற்சித்ததாக சுட்டுக் கொல்லப்படும் தியரியைக் கொண்டு வந்தவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆவார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற பல படுகொலைகளின் கோட் பாதராகவும் அழைக்கப்பட்டவர் இதே சந்திரா பெர்னாண்டோ ஆவார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் மற்றுமொரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதால் நந்தசேனவின் ஆணைக்குழு எந்த அளவு தரமானது என்பதை கணித்துக் கொள்ள முடியும்.
---------------------------
by (2020-01-12 09:56:19)
Leave a Reply