(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 14 பிற்பகல் 05.00) தனக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நபர்களின் அழைப்புகளை அவர்களுக்குத் தெரியாமல் குரல் பதிவு செய்து அதனை அம்பலப்படுத்த செயல்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சட்டமா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு விடுத்த உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பின் (111) ஏ (2) சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு அனாவசியமான அழுத்தங்களை பிரயோகித்ததாக ரஞ்சன் ராமநாயக்க மீது சட்டமா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு வருட சிறை தண்டனையும் 7 வருட கால குடியுரிமை பறிப்பும் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சங்கம் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
குரல் பதிவு குற்றச்சாட்டுகளில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வேட்புமனு கிடைக்கவும் வாய்ப்பு இல்லை.
ரஞ்சன் ராமநாயக்க நல்ல வேலை செய்ததாக சிலர் கருதுகின்ற போதிலும் அது அவ்வாறு இல்லை. ரஞ்சன் நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக குரல் எழுப்பி விட்டு நீதிபதிகளுக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்துள்ளார். பத்மினி ரணவக்க நீதிபதி 'இயலாது' என்று கூறியபோது இல்லை ஜனாதிபதியிடம் அழைத்துச் செல்வதாக ரஞ்சன் அழுத்தம் கொடுத்துள்ளார். மற்றவர்கள் டீல் அரசியல் செய்வதாக குற்றம் சுமத்திய ரஞ்சன் விமல் வீரவன்சவின் மனைவிக்கு தொலைபேசியில் கதைத்து அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்க அழுத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க வாயைத் திறந்தால் சமத்துவம் பற்றி பேசி வருகின்ற போதும் அவருடைய தொலைபேசி குரல் பதிவுகளில் வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் அவர் மத பேதம் சாதி பேதம் என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை நோக்கி மஹிந்தானந்த அலுத்கமகே விமல் வீரவன்ச போன்றவர்கள் சேறு பூசும் வகையில் கருத்துக்களை வெளியிட ரஞ்சன் ராமநாயக்க வழி ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் நீதிமன்றத் துறை அல்லது சட்டத்துறை ஒழுங்கு அல்லது எதிர்க்கட்சிக்கு உகந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. ரஞ்சன் மோசடிகாரர்களுக்கு எதிராக போராடினார் என்ற நிலை பொய்யாகி உள்ளது. மோசடிக்காரர்களை குற்றங்களில் இருந்து தப்பிக்க வைக்க ரஞ்சன் ராமநாயக்க செயல்பட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் சுமார் 8 லட்சம் பயனர்களை கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க மோசடிகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமானால் அதற்கென தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் ரஞ்சன் ராமநாயக்க தனது தனிப்பட்ட பெயரை புகழை உயர்த்திக் கொள்வதற்காக செய்த காரியத்தால் பல நல்ல மனிதர்கள் இன்று கஷ்டத்தில் விழுந்துள்ளனர்.
---------------------------
by (2020-01-15 06:05:58)
Leave a Reply