சந்திர பிரதீப் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 21 முற்பகல் 11.50) கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையத்தை உடைத்து மரக்கறி மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை திருடிய நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் சில பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கடந்த 19ஆம் திகதி மற்றும் 18 ஆம் திகதிகளில் அம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மரக்கறி மற்றும் பெரிய வெங்காயம் ஆகியன திருடப்பட்டு உள்ளதுடன் இது குறித்து பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி நந்தசேனவின் கட்டளையின் பேரில் போலீசார் இந்த சம்பவங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தயங்கியுள்ளனர்.
இவ்வாறு இடம்பெற்ற திருட்டுக்கள் அனைத்தும் மரக்கறி விற்பனை நிலையங்களிலேயே இடம் பெற்றுள்ளதுடன் இவை அனைத்தும் சாதாரண திருட்டு சம்பவங்களாக பதிவாகி உள்ளன. காரணம் குறித்த மரக்கறி விற்பனை நிலையங்களில் இருந்து போஞ்சி, பீட், கோவா, கத்தரிக்காய் போன்ற மரக்கறிகளும் பெரிய வெங்காயமும் திருடப்பட்டுள்ளன. மேற்கூறிய மரக்கறிகள் கிலோ ஒன்று 450 ரூபாவிற்கு அதிகமாகும். நந்தசேன ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் குறித்த மரக்கறிகள் கிலோ ஒன்று 50 ரூபாவாக காணப்பட்டன. இன்று பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் விலை 850 ரூபாவிற்கும் அதிகமாகும்.
இலங்கையில் மேற்கூறப்பட்ட மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை உலகத்தில் அதிக செலவு செய்யும் நகரமான லண்டனில் மரக்கறிகளின் விலையுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகும். பயிர்ச் செய்கை செய்யப்படாத தற்போதைய குளிர் கால நிலையிலும் லண்டனின் 'மொரிசன்ஸ்' போன்ற குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் கரட் கிலோ ஒன்றின் விலை 60 பவுன் ஆகும். இலங்கை பெறுமதியில் அது 140 ரூபாய் ஆகும். லண்டனில் வயதுக்கு வந்த தொழிலாளி ஒருவரின் நாள் சம்பளம் 14780 ரூபாவாக இருக்கும் நிலையில் அங்கு கேரட் கிலோ ஒன்றின் விலை 140 ரூபாயாக உள்ளது. எனினும் இலங்கையில் கரட் கிலோ ஒன்றின் விலை 450 ரூபாவாகும். இதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் தொடக்கம் ஆயிரத்து 500 ரூபா சம்பளம் பெறும் இலங்கை நபர் ஒருவருக்கு நாளொன்றில் இரண்டு மரக்கறிகள் மாத்திரமே தலா ஒரு கிலோ வீதம் கொள்வனவு செய்ய முடியும்.
இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணம் நாட்டில் அரிசி வகைகளின் விலை கிலோ ஒன்று 120 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது. நாடு, வெள்ளை பச்சை, சிவப்பு போன்ற அரிசி வகைகள் கிலோ ஒன்று 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. கஷ்டமான குடும்பங்களுக்கு இந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்வது மிகவும் சிரமமான விடயமாகும். மேலும் நாட்டில் கடும் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் நாட்டு மக்கள் அரசி திருடும் நிலைக்கும் தள்ளப்படுவர்.
இதனால் தான் நாட்டு மக்கள் தங்கம் அல்லது பணத்திற்கு பதிலாக மரக்கறி திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை எதிர்காலத்திற்கு மிகவும் அபாயமான ஒன்றாகும். காரணம் நாட்டில் மக்கள் உணவு திருடுவது பஞ்சம் ஏற்பட்டு இருக்கும் போதாகும். இதன் மூலம் நந்தசேன கோட்டாபயவும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து நாட்டை பஞ்சம் வரும் நிலைக்கு தள்ளி உள்ளனர் என்பது தெளிவாகிறது.
நவம்பர் 16ஆம் திகதி இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற நந்தசேன கோட்டாபய நவம்பர் 23ஆம் திகதி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என இராணுவத்தை அழைப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பை விடுத்தார். ஆனால் இன்று நாட்டைக் காக்க வந்த நந்தசேனவிற்கு மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நந்தசேன மற்றும் அவரது வியத்மக பொய் குழுவினருக்கு நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகத்தை சரியாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை. நாட்டில் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து சென்று கொண்டிருக்கும் நிலையில் அரச ஊழியர்களின் அடிப்படை கொடுப்பனவு மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு என்பவற்றை நிறுத்தி உள்ளனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு கடந்த அரசாங்கம் இலவசமாக வழங்கி வந்த 25,000 ரூபா பெறுமதியான போசாக்கு உணவு அடங்கிய உணவு பொதி திட்டத்தை நந்தசேனவின் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களின் சீருடைகான கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை அதேபோன்று செயற்படுத்தி செல்ல முடியாத அரசாங்கம் செயல் திறனற்ற அரசாங்கம் என்று அழைக்கப்படும். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்த போதும் நாட்டு மக்களளுக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இருந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து சலுகை அடிப்படையில் வழங்கி வந்தது. நல்லாட்சி அரசாங்கத்தால் ஐந்து வருடங்கள் இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. சுமார் ஐந்து வருட கால ஆட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டணம் என்பவற்றை அதிகரிக்காத அரசாங்கம் என்ற பெருமையையும் நல்லாட்சி அரசாங்கம் பெற்றது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு இந்த சலுகைகளை வழங்கியது நாடு வெளிநாட்டிற்கு செலுத்த வேண்டிய பாரிய தொகை கடனை செலுத்தி கொண்டு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டு என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
இந்த அற்புதத்தை செய்தது யார்? எப்படி?
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த நிலையை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள காரணம் அவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பாக நோக்கம் மற்றும் ஒழுக்கம் என்பவை காணப்பட்டமை ஆகும். வேறு எந்த காரணமும் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருட ஆட்சியில் பொருளாதாரம் நிதி நிர்வாகம் குறித்து உயர்ந்த முடிவுகளை எடுத்து நிர்வாகம் செய்தது மூன்று நபர்களே. ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரே அவர்கள். இவர்கள் அல்லாது இன்று வீரர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் சஜித் பிரேமதாசவோ அஜித் பி பெரேராவோ நளின் பண்டார போன்றவர்களோ அல்ல. இந்த விடயத்தில் ரணில், ரவி, மங்கள போன்றவர்களுக்கு பெருமை போய் சேர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அதிகாரப் போட்டிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு குழுவினரால் ரணில், ரவி, மங்கள போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமையையும் நந்தசேன, மஹிந்த ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய கெட்ட பெயரையும் நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துரைக்க யாருமில்லை.
நாட்டு மக்கள் இன்று மரக்கறி மற்றும் பெரிய வெங்காயத்தை திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சிலர் அபூர்வமான கதைகளை கூறுகின்றனர்.
இந்த கட்டுரையை எழுதிய நபருடன் உரையாடிய பொதுமகன் ஒருவர் தனது வீட்டிலுள்ள மரக்கறி பெரிய வெங்காயம் போன்றவற்றை தனது வங்கி பாதுகாப்பு பெட்டியில் வைத்து விட்டு வங்கி பாதுகாப்பு பெட்டியில் உள்ள தங்க நகைகளை வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்க உள்ளதாக கூறினார்.
மற்றுமொருவர் மரக்கறி விலை அதிகரித்துள்ளதால் நன்மை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
'அது எவ்வாறு?'
"முன்னர் வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்த தொடங்கி விட்டு 'பைட் பிளேட்' ஒன்றை கேட்டால் அதில் இறைச்சி துண்டுகள் குறைவாகவே காணப்படும். அந்த பிளேட்டில் பெரிய வெங்காயம், கறி மிளகாய் போன்ற பொருட்களே அதிகமாக இருக்கும். ஆனால் இன்று அந்த நிலை மாறி தற்போது கொடுக்கப்படும் பைட் பிளேட்டில் பெரிய வெங்காயம் கறி மிளகாய் போன்ற மரக்கறிகள் குறைந்து அபூர்வமான வகையில் இறைச்சி துண்டுகளை அதிகமாக காண முடிகிறது.." என்று கூறுகிறார்.
---------------------------
by (2020-01-21 09:25:45)
Leave a Reply