(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 22 பிற்பகல் 06.40) இராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பட்டப்பகலில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட வைத்தி பீட மாணவி களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மாணவி ஆவார்.
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் இந்த கொடூரக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவ வீரர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட குறித்த மாணவியின் சடலம் கடற்கரை அருகே கிடந்ததை பிரதேச மக்கள் கண்டுள்ளனர். கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட குறித்த மாணவியின் சடலம் பின்னர் கடலில் விழுந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிற்பகல் 02.30 மணி அளவிலேயே சடலம் மீட்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்தின் பின்னர் இராணுவ வீரர் தப்பிச்செல்ல முயற்சித்த போது பிரதேச மக்கள் நீதியை மோடி குறித்த நபரை தப்பிச் செல்ல விடாது தடுத்துள்ளனர். பின்னர் விசேட அதிரடிப் படையினர் மற்றும் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சந்தேகநபரான இராணுவ வீரரை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மருத்துவ பீட மாணவியின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய 'இராணுவ வீரர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்' என விமர்சனங்களை முன்வைத்தது இவ்வாறான கொலைகளை புரிந்த இராணுவ வீரர்களை நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்தமைக்கு எதிராகவே.
இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து இலங்கையின் பிரதான உள்நாட்டு ஊடகங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீட சிங்கள மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டு உள்ள போதும் இந்த கொலையை செய்தது இராணுவ வீரர் என்பதை மறைத்துள்ளனர்.
---------------------------
by (2020-01-23 09:43:47)
Leave a Reply