(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 23 பிற்பகல் 06.35) இலங்கை சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி மூலமாக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கடந்த 20ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஜயம்பதி விக்ரமரத்ன சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி உள்ளதுடன் இது தொடர்பான அறிவித்தலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி 22ஆம் திகதி பாராளுமன்றில் வெளியிட்டார். இதன்படி வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு இடதுசாரி அணியில் செயல்படும் சமூக செயல்பாட்டாளர் சமன் ரத்னபிரியவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். சமன் ரத்னபிரிய அரச தாதிமார் சங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். தாதி உத்தியோகத்தர் ஒருவர் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜயம்பதி விக்ரமரத்னவின் வெற்றிடத்தை நிரப்பவென சமன் ரத்னபிரியவை பரிந்துரை செய்து எழுத்து மூலம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளார். இதற்கு காரணம் 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தவர் தேசத்துரோகி என அறிவிக்கப்பட்டு மரணம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவரது உடல் முழங்காலுக்கு கீழ் தூக்குவதற்கு முடியாமல் 88- 89 காலப்பகுதியில் நடந்ததுபோல செய்ய வேண்டுமென கூறிய முன்னாள் இராணுவ மேஜர் கமல் குணரத்ன கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை ஆகும்.
இதன்படி 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆகிய மூவர் கோட்டாவின் அரசாங்கத்தில் பழிவாங்கும் இலக்காக இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன மாத்திரமன்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவும் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளார். அத்துடன் இவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் சில ஊடகவியலாளர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியது வெளிநாட்டில் இருக்கும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக காணப்படுவதை விரும்பாத அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி புதிய ஒருவரை நியமித்துக் கொள்ள வழி ஏற்படுத்தியும் ஆகும்.
ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன அரசியல் யாப்பு சட்டம் தொடர்பில் உலகிலுள்ள புலமை பெற்றவர்களில் முக்கியமான நபராக விளங்குகிறார். வெளிநாடுகளுக்கு அரசியல் யாப்பு உருவாக்கவும் தனது பங்களிப்பை செய்த புத்திஜீவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-01-24 06:36:53)
Leave a Reply