எழுதுவது முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்னாயக்க
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 28 பிற்பகல் 03.20) இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டவல் ஜனவரி 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருந்தார். அஜித் குமார் டவல் பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்யவென 50 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இணக்கம் தெரிவித்ததாக கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ ஊடக பிரிவு அறிவித்தது. இந்த சந்திப்பின்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பிரிவு மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரண ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிப்ரவரி மாதத்தில் தனது படையுடன் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.
இந்தியாவில் இந்துத்துவம் மேன்மை பெற்று காணப்படுவதால் பிரதமர் நரேந்திரமோடி பெரும் சிக்கலுக்குள் மாட்டியுள்ளார். காஷ்மீரில் இருந்து லடக் பிரதேசத்தை பிரிப்பது, முஸ்லிம் விவாகரத்து சட்டத்தை மாற்றுவது, அயோத்தியா வழக்கு விசாரணை தீர்ப்பு போன்ற விடயங்களை மக்களின் கைத்தட்டல் மழைக்கு மத்தியில் நிறைவுக்கு கொண்டு வர மோடியால் முடிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்ட குடி உரிமை சட்டத்தால் இந்தியாவில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அனாவசியமாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. ஆனால் அவர்களது பிள்ளைகள் இந்தியாவில் பிறந்து பாடசாலைகளில் கல்வி கற்பதால் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்தது. இந்திய மண்ணில் பிறந்ததால் இந்த அகதிகளின் பிள்ளைகளுக்கு இந்தியாவில் குடி உரிமை கிடைத்த போதும் பெற்றோர்களுக்கு குடி உரிமை கிடைக்கவில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தின் மூலம் பெற்றோர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு இவ்வாறானதொரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 99 சதவீதமானவர்கள் முஸ்லிம் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்ட மூலத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக தற்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது தடவை தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் அவருக்கான பிரபல்யம் குறைந்து காணப்பட்டது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பின்னர் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர் மீண்டும் பிரபலமான நபராக மாறினார். இந்தியாவில் வாக்களிப்பு என்பது இலங்கை போன்று ஒரே நாளில் முடிந்து விடுவதில்லை. சுமார் ஒரு மாத காலம் வாக்களிப்பு நீடிக்கும். இந்தியாவில் தேர்தல் தொடங்கப்பட்ட போது இலங்கையில் ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்றது. தேர்தல் முடியும் வரை நரேந்திர மோடி இந்த ஞாயிறு குண்டு தாக்குதலை தன் தோள் மேல் தூக்கிக் கொண்டு திரிந்தார். கோட்டாபய ராஜபக்ஷவும் ஞாயிறு குண்டுத் தாக்குதல் மூலமாகவே வெற்றி அடைந்தார். ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளாக கோட்டாபய ராஜபக்சவின் புலனாய்வு நண்பர்கள் குழு மற்றும் சுப்ரமணியன் சுவாமியின் ஆர்எஸ்எஸ் குழுவும் காணப்பட்டது. சஹரான் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் உருவானது என்பதுடன் இந்த அமைப்பில் இருந்தவர்கள் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் சுரேஷ் சாலியின் தலைமையில் இறங்கியுள்ளனர் என்பதை நாம் முன்கூட்டியே அறிவித்திருந்தோம்.
ஆனால் தற்போதைய நிலையில் நரேந்திர மோடியின் அரசாங்கம் மீண்டும் சிக்கலில் விழுந்துள்ளது. சுமார் இரண்டு மில்லியன் முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் குடி உரிமை சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகள் வலுப்பெற்று உள்ளதால் அந்த சட்டமூலம் தடைப்பட்டுள்ளது. எனினும் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏதேனும் ஒரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுமாயின் முஸ்லிம் பயங்கரவாதத்தை காட்டி அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அஜித் குமார் டவல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சுமார் இரண்டு வாரங்கள் இந்தியாவில் பதற்றமான நிலையே காணப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள கேரளா எல்லையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்ட குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த சுமார் 250 முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு என இலங்கையிலிருந்து சிலர் இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்து சிலர் இலங்கைக்கும் வந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய விசாரணை பிரிவு (NIA) என்பது பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவில் செயல்படும் விசேட புலனாய்வு பிரிவாகும். ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த பிரிவினருக்கு வலயத்தில் எந்த நாடுகளுக்கும் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் கிடைத்தது. இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டமூலம் ஒன்றின் ஊடாக இவர்களுக்கு இந்த அனுமதிப் பத்திரம் கிடைத்தது. எனவே அஜித் குமார் டவல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் அச்சம் பரப்பப்பட்டமை வெறுமனே அல்ல என்பது இப்போது தெளிவாகும். ஆகையால் தேசிய புலனாய்வு பிரிவு NIA உத்தியோகபூர்வமாக இலங்கை வந்துள்ளமை உறுதியாகிறது.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நபரால் கடத்திச் செல்லப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக கூறப்படும் 'சாரா' என்ற புலஸ்தினி ராஜேந்திரன் சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதும் அது பொய்யாகும். சாராவின் டிஎன்ஏ பரிசோதனை உயிரிழந்த எந்த உடல்களுடனும் ஒத்துப்போகவில்லை. தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய ஆறு தற்கொலைதாரிகளின் மனைவிமார்களில் ஒருவரது மனைவி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். சாரா உள்ளிட்ட தற்கொலை தாக்குதலுக்கு சத்தியம் செய்து கொண்ட 6 பெண்கள் உயிருடன் உள்ளனர். இவர்கள் அனைவரும் சுரேஷ் சாலியின் பாதுகாப்பில் உள்ளனரா? இல்லையேல் சாலியின் நிர்வாகத்தில் தொடர்ந்தும் இயங்குகின்றனரா? என்பது பரம ரகசியமே. இந்தப் பெண்களது பெயர் முகவரி என்பன வெளியிடப்பட்டு உள்ளதால் சாதாரண மக்களுடன் வாழ்க்கை நடத்த முடியாது. ஒன்று ஆயுதமேந்திய அவர்கள் ஆயுதத்தால் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும். அல்லது சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவின் NIA பிரிவு இலங்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு என்ன நடந்து இருக்கும் என்பதற்கு காலமே பதில் சொல்லும்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஞாயிறு குண்டுத் தாக்குதல் பலி பூஜைக்கு கோட்டா உதவி செய்து இருந்த போதும் தற்போது நிலை மாறியுள்ளது. காரணம் இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு தாக்குதல் நடைபெற்றால் முதலில் அவதூறு சொல்லப்படும் நபராக யுத்த வல்லுனர் 'வேலை செய்யும் வீரர்' கோட்டாபய ராஜபக்சவே திகழ்வார். அதனால் பூமியில் இடம்பெறும் தாக்குதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் விமானம் ஒன்று கடத்தல், சைபர் தாக்குதல் போன்றவை நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறான சதித் திட்டத்தின் மூலம் இரண்டு தரப்பினருக்கும் செல்ல வேண்டிய இலக்குகள் நீண்டதாக இருக்கும்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இணையதளம் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஸ்கேன் செய்யக்கூடிய பிகாசஸ் Pegasus போன்ற உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும். தேசிய அடையாள அட்டை தொடக்கம் வங்கிக் கணக்கு விடயங்கள் வரை தனி நபர் தரவுகளை கணினி மயப்படுத்த முடியும். அரசாங்க நிறுவனங்களில் வரிசையில் நிற்காமல் தங்களது தேவைகளை தொழில்நுட்பம் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அரசு நிறுவனங்களில் மாத்திரமன்றி மாகாண அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும் தொழில்நுட்ப வசதி செய்து கொள்ள முடியும். நல்லதை நல்லம் என்று சொல்வதற்கும் தீயதை கெட்டது என்று சொல்வதற்கும் நாம் பின்வாங்கப் போவதில்லை.
சீருடையில் நட்சத்திர பட்டைகளை குத்தி உள்ள கமல் குனேவின் நந்திக்கடல் பட்டாந்தரை கதை குறித்து தாமரை மொட்டு ஆதரவாளர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு தற்போது சளிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டாவின் 'ஹிட் ஸ்கொட்' பிரிவிற்கு கொலை அனுமதிப் பத்திரம் வழங்கும் அரசு புலனாய்வு பிரிவு சட்ட மூலத்தை சட்டமாக்குவதற்கு முன்னர் நாட்டினுடைய பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இலங்கை நாட்டினுடைய மக்கள் தொடர்பான தரவுகளை கணினி மயப்படுத்தும் திட்டத்திற்கு முன்னர் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 4 லட்சம் சீனர்கள் குறித்து அடிப்படை சட்டத்தை செயல்படுத்த வேண்டும். சீனர்கள் இலங்கையில் கொள்வனவு செய்துள்ள பாரிய அளவான காணிகள் குறித்து அவை கொள்வனவு செய்யப்பட்ட முறைகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சீனர்களுக்கு இவ்வாறு பாரிய அளவு காணிகளை இலங்கையில் கொள்வனவு செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்த அரச அதிகாரிகள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் குறித்து ஆராய வேண்டும். வெளிநாட்டு புலனாய்வு பிரிவு நபர்களின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ள இலங்கை தாய்நாடு குறித்து மிகவும் பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.
முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி
---------------------------
by (2020-01-28 13:46:59)
Leave a Reply