(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 02.45) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியை சேர்ந்த பிரபல பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டாரவின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு சிக்கிக் கொண்ட நிலையில் தற்போது அந்த அலுவலகம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இணைப்பு செயலாளர் என்டன் என்பவரால் இவ்வாறு கள்ள நோட்டு அச்சிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சராக இருந்த காலத்தில் இந்த கள்ள நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. ரஞ்சித் மத்தும பண்டாரவின் மொனராகலை அலுவலகத்திற்குள் இந்த கள்ள நோட்டு அச்சிடப்பட்டு உள்ளதுடன் அதற்கு அங்குள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது இணைப்பு செயலாளர்களாக மிக நம்பிக்கைக்குரிய விசுவாசத்திற்கு உரிய நபர்களையே நியமிக்கின்றனர். ஒரு சில அமைச்சர்கள் தங்களுடைய அனாவசிய வேலைகளை குறித்த செயலாளர்களை வைத்தே செயல்படுத்துகின்றன.
29ஆம் திகதி மொனராகலை நகரில் அதிர்ஷ்ட லாபம் சுட்டு விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து குறித்த கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னரே முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 500 ரூபாய் கள்ள நோட்டு நூறு ரூபா நோட்டுக்கள் 2 மற்றும் 20 ரூபா நோட்டுடன் அதிர்ஷ்ட லாப சிட்டு கொள்வனவு செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் அலுவலகத்தில் வேலை செய்யும் 64 வயதுடைய நபர் ஆவார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் அலுவலகத்தை சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த அலுவலகத்திலிருந்து அச்சு இயந்திரத்தில் கள்ள நோட்டு அச்சிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாஞ்சலி பிரேமதாச கள்ள நோட்டுகள் பலவற்றுடன் கைது செய்யப்பட்ட போது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.
மொனராகலை ரஞ்சித் மத்தும பண்டார அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் அபூர்வமான கருத்தை தெரிவித்தார்.
"பிரதமர் ஆகும் ஆசையில் ஜனாதிபதியாக்க கள்ள நோட்டுக்களை அச்சடித்துக் கொடுத்திருப்பார்"
---------------------------
by (2020-01-30 16:13:09)
Leave a Reply