(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 09.45) காட்டு சட்டத்தின் ஊடாக கொலைகள் மற்றும் சாக்கு விளையாட்டுக்களைக் காட்டியதை தவிர சட்டத்திற்கு அடிபணிந்து செயல்படுவதற்கு எந்த ஒரு அனுபவமும் இல்லாத நந்தசேன ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் 69 லட்சம் வாக்காளர்களை காண்பித்து சட்டத்தை நாய்க்கு வீசிவிட்டு அச்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சி நடத்த முயற்சிக்கிறார். இதற்காக அரச நிறுவனங்களை தனது 'கள்ளன்கள்' கூட்டத்தைக் கொண்டு அடக்கி ஆள நந்தசேன முனைகிறார். குறித்த நிறுவனங்களில் நிர்வாக கட்டமைப்பு இருக்கின்ற போதும் தனது 'கள்ளன்' ஒருவரை நியமித்து பூரண ஆட்சி அதிகாரத்தை தன்வசப்படுத்துகிறார். நந்தசேன மீது உள்ள அச்சத்தால் அவர்கள் சொல்வதை கேட்டு நிறுவனத்தின் பிரதானிகள் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நந்தசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வைத்திருக்க முடியாது என்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாமல் அவர் பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமித்து அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அந்த பாதுகாப்பு செயலாளர் ஊடாக உத்தரவுகளைப் பிறப்பித்து தனக்கு தேவையானதை செய்து கொள்கிறார். அமைச்சு ஒன்றுக்கு அமைச்சர் இல்லாமல் அமைச்சு செயலாளர் ஒருவர் இருக்க முடியாது. அமைச்சு ஒன்றுக்கு அமைச்சர் ஒருவர் இல்லாமல் செயலாளர் மட்டுமே நியமிக்கப்பட்டமை 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர் ஆகும். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாது. உண்மையில் தற்போது பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குனே கோட்டாபய ராஜபக்சவின் 'கள்ளன்' ஆவார். இவருடைய உத்தரவுகள் சட்ட ரீதியானதாக அமையாது. கமல் குனேவின் உத்தரவுகள் சட்டவிரோதமானது என கூறி நாட்டின் பிரஜை ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சித் தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்கிறாரே தவிர இவ்வாறான விடயங்களை முன்வைத்து சவால்கள் விடுக்காமை கவலையளிக்கிறது.
கமல் குனே போன்று மேலும் இரு கள்ளன்கள் உள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிர்வாகம் நடத்துவது இன்று சட்டமா அதிபர் தப்புல லிவேரா அல்ல. இவருக்கு உயரத்தில் இருந்து உத்தரவுகளை பிறப்பிப்பது வேறு யாருமல்ல முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை வீட்டுக்கு விரட்டி அடித்து ராஜபக்சக்களினால் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மோஹான் பீரிஸ் ஆவர். இவர் முன்னாள் சட்டமா அதிபராகவும் செயல்பட்டார். மொஹான் பீரிஸ் இன்று நந்தசேனவின் சட்ட ஆலோசகராக செயல்படுகிறார். மொஹான் பீரிஸிற்கு உதவி செய்யும் மற்றுமொரு நபர் உள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் செயல்பட்ட முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் என்பதுடன் கடற்படையின் சட்ட வல்லுநராக செயல்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெனாண்டோ ஆவார். சட்டமா அதிபர் தப்புல லிவேராவிற்கு மேலே சென்று உத்தரவுகளைப் பிறப்பித்து சட்டமா அதிபர் திணைக்களத்தை ஆட்டிப் படைக்கும் இவ் இருவரும் நந்தசேனவின் கள்ளர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சட்டமா அதிபர் தப்புல லிவேராவின் தங்கப் பெண்களான இருவர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் இன்று இல்லாமல் தப்புல வெறும் நபராக செயல்படுகிறார். இதனால் சட்டமா அதிபர் திணைக்களத்தில் நந்தசேனாவிற்கு ஆதரவான கள்ளர்கள் கூட்டம், தப்புலவிற்கு ஆதரவான கூட்டம் மற்றும் சட்டத்தை மதிக்கும் நடுநிலையான கூட்டம் என மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர்.
ஒரு தடவை நந்தசேன பிணை முன்பணம் கட்டுவதற்கு கால தாமதம் ஏற்பட்டதால் அதுவரை அவரை நீதிமன்ற விளக்கமறியலில் வைத்திருந்த அப்போதைய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு இல்லாத அதிகாரம் ஒன்றை கையிலெடுத்து உத்தரவு பிறப்பித்தது சட்டமா அதிபர் இல்லை எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தப்புலவிற்கு மேல் சென்று உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நந்தசேனவின் கள்ளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை பயமுறுத்துவதே நந்தசேனவின் நோக்கமாகும். ஆனால் சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டு நீதிமன்றத்திற்கு விரோதமாக கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யும் நந்தசேனவின் முயற்சியை தோல்வியடையச் செய்தனர். ஆனால் ஜனாதிபதி நந்தசேனவே குறித்த உத்தரவை நீக்க வைத்ததாக அமைச்சர் விமல் வீரவன்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உண்மையில் கிஹான் பலப்பிட்டியவை கைது செய்ய சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி நந்தசேன நடவடிக்கை எடுத்து இருந்தால் அதுவும் சட்டத்துறையில் ஜனாதிபதியின் தலையிட்டையும் அழுத்தத்தையும் காட்டி நிற்கும். எனவே இதன்மூலம் சட்டமா அதிபர் ஊடாக நீதிபதிகள் கைது உத்தரவு பின்னணியில் ஜனாதிபதி நந்தசேன இருப்பது தெளிவாகிறது. நந்தசேனவிற்கு பதிலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்து செயல்படுவது நாம் மேலே கூறிய நந்தசேனவின் இரு கள்ளர்கள் ஆவார்.
சட்டத்தை மதிக்காது பைத்திய நாடகமாடும் நந்தசேனவின் செயல்பாடுகள் மீண்டும் ஒருமுறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கப்பம் பெறும் நோக்கில் 11 மாணவர்களை கடத்தி காணாமல் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் கடற்படை இராணுவப் பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் தொடர்பான விடயங்களை ஆராயும் நந்தசேனவின் ஆணைக்குழு இறுதி பரிந்துரைகள் வரும்வரை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு பிறப்பித்த உத்தரவை சட்டமா அதிபர் தப்புல லிவேரா நிராகரித்துள்ளார். இதன் மூலம் கள்வர்கள் கூட்டத்திற்கு மத்தியில் மாட்டிக் கொண்டு தப்புல லிவேரா சட்டமா அதிபர் செயல்படுவது புலனாகிறது.
ஜனாதிபதி நந்தசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் நாம் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது ஊழல்வாதிகள் அடங்கிய ஆணைக்குழு ஆகும். இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன என்ற 'பிஸ்ஸு பூசா' என பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்படும் நபராவார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஜயதிலக்க கப்பம் பெற்று கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர். முன்னர் காணப்பட்ட இரண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சட்டமா அதிபருக்கு இந்த மூவர் அடங்கிய ஆணைக்குழுவே உத்தரவு பிறப்பித்தது.
கப்பம் பெறும் நோக்கில் மாணவர்களை கடத்தி கொலை செய்த சம்பவத்தை அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் கணித்துள்ள முன்னாள் கடற்படை தளபதி மற்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் ஆகியோர் கடந்த 22 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன் 23ஆம் திகதி மறுநாள் குறித்த வழக்கு விசாரணையை இடை நிறுத்துமாறு ஊழல்வாதிகள் நிறைந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.
எனினும் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கும் யாப்பு ரீதியான சட்ட ரீதியான அதிகாரம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இல்லை என தெரிவித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் அளித்து சட்டமா அதிபர் பதவியின் கௌரவத்தை தப்புல லிவேரா பாதுகாத்துள்ளார்.
சட்டமா அதிபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்வது விசாரணைகளில் இருந்து பெறப்படும் சாட்சிகளை அடிப்படையாக கொண்டே தவிர வேறு வெளி வாரியான தகவல்களை அடிப்படையாக கொண்டு அல்ல என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பதிலளித்துள்ள சட்டமா அதிபர், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் 14 பேருக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை அனைத்து சாட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சட்டரீதியாக எனவும் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் பதிலளித்துள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பின் 04 சி மற்றும் 105ஆவது சரத்துக்களின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனது கடமையான முறைப்பாடுகளை செயற்படுத்தல் நிறுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட எவ்வித அடிப்படை அதிகாரங்களும் இல்லை என குறித்த ஆணைக்குழுவிற்கு விளக்கம் அளித்துள்ள சட்டமா அதிபர் தப்புல லிவேரா, ஆணைக்குழு சட்டத்தின் 16வது சரத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கவோ கட்டளைகளை இடவோ யாப்பு ரீதியான அல்லது வேறு விதமான அதிகாரங்கள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நந்தசேன தனது கள்ளர் கூட்டத்தின் ஊடாக சட்டம் மற்றும் நீதித் துறையுடன் முன்னெடுக்கும் இந்த கொலை விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். நந்தசேன ருவன்வெலிசாய பூமியில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது இலங்கை நாட்டின் அரசியல் யாப்பை பாதுகாப்பதாகவே தவிர மீறுவதாக அல்ல. மொஹான் பீரிஸ், விஜயதாச ராஜபக்ச போன்ற பல்டி அடிக்கும் நபர்களிடம் சட்ட ஆலோசனை பெற்றால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் நந்தசேனவும் சிறிசேனவை தோற்கடித்து ஜோக்கர் ஆகிவிடுவார். காரணம் சிறிசேனவிற்கு பிரதமரை பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமரை நியமிக்க முடியும் என சட்ட ஆலோசனை வழங்கியதும் சிறிசேனவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்களே. இறுதியில் சிறிசேன சர்வதேச ஜோக்கராக மாறினார். இவ்வாறு நடந்து கொண்டால் நந்தசேனவிற்கும் இதே நிலை ஏற்படும்.
எதிர்க்கட்சித் தலைவரும் சண்டைக் கோழி போன்று தலைமைத்துவ பதவிக்காக அடித்துக் கொள்ளாமல் சட்டம் மற்றும் நீதித்துறையின் இறைமையை பாதுகாப்பதற்காக சுயாதீனத்தை பாதுகாப்பதற்காக தலைமைத்துவம் வழங்க வேண்டும். அப்படி இல்லையேல் இவர்களும் நாட்டு மக்களால் தூக்கி வீசப்படுவர் அதனை யாராலும் தடுக்க முடியாது.
---------------------------
by (2020-01-30 16:23:40)
Leave a Reply