~

விமான திருட்டு சம்பவத்தில் கபில சந்திரசேகர மற்றும் மனைவி விளக்கமறியலில்..! மிக் விமான திருட்டுக்கு..?

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 6 பிற்பகல் 07.10) இலங்கை விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யும் போது 20 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியூமாலி விஜேநாயக்க ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (06) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும்  Air Bus SAS நிறுவனம் 2013 மே மாதம் 16ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் Air Bus SAS நிறுவனம் இலங்கை விமான சேவை நிறுவனத்திற்காக A330-900 தரமுடைய 4 விமானங்கள் மற்றும் A330-300 தரமுடைய 6 விமானங்கள் போன்றவற்றை Air Bus SAS நிறுவனத்தின் தாய் நிறுவனமான EADS HQ - SSC FRANCE  நிறுவனத்தில் இருந்து கொள்வனவு செய்யவென 20 லட்சம் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அந்த லஞ்சப் பணத்தை திரிபுபடுத்தி காட்டியுள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியூமாலி விஜேநாயக்க ஆகியோரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுடன் ஆரம்பிக்கக் கூடிய வங்கி கணக்குகளில் குறித்த லஞ்சப் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், நிர்வாக குளறுபடிகள் மற்றும் குறித்த நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளமை தொடர்பில் ஆராய கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜே. சி.வெலியமுன குழுவின் அறிக்கையிலும் Air Bus SAS ஊழல் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நல்லாட்சி அரசாங்கத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இடம் பெறவில்லை. என்னும் Air Bus SAS  நிறுவனத்தினால் லஞ்சம் வழங்கி விமான கொள்வனவு கேள்விப் பத்திரம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டிணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை மூடி மறைக்கவென இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கிய விடயத்தையும் மூடி மறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் முதன் முதலில் அரச முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ரவீந்திர ஹேவாபத்திரன நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அண்மையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல லிவேரா வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இன்று இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான சேவை நிறுவனத்திற்கு விமான கொள்வனவின் போது 20 லட்சம் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 70 லட்சம் அமெரிக்க டாலர் கொள்ளையடிக்கப்பட்ட மிக் விமான கொள்வனவு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தயவினால் சுதந்திரமாக இருக்கின்றார். இன்று அந்த நபருக்கு வரப்பிரசாத விடுதலையும் கிடைத்துள்ளது.  

படங்கள் லங்காதீப

---------------------------
by     (2020-02-06 18:11:19)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links