~

இந்து சமுத்திரத்தில் கண்ணீர் வடிக்க வைக்கும் அரசியல்வாதிகளின் வாகன கொள்வனவு நாடகம்..! (Video)

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 10.50) மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அரசாங்கத்தின் அமைச்சரும் ஆளும் கட்சி பிரதம கொரடாவுமாகிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழங்கிய பதில்களினால் இலங்கை நாட்டு மக்களின் இதயம் சற்று நேரம் அடைப்பட்டது உண்மையே.

மன்னிக்கும் தேவ குணமும் நின்றது..

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பிணத்திற்கு மேல் நின்று, அடக்குமுறைக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் கண்ணீருக்கு மத்தியில் நின்று, தீ வைக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் சாபங்களை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் 5 வருடகால ஆட்சியில் எந்த ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் நிவாரணம் வழங்காமல் தங்களுடைய குண்டியை சூடாக வைத்துக் கொண்டு சொகுசாக செல்லக்கூடிய அதி சொகுசு வாகனங்களை நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்து 28,000 லட்சம் ரூபாவிற்கு அதிகமான தொகையை செலவு செய்து கொள்வனவு செய்துள்ளதை கேட்கும்போது உண்மையான ஊடகவியலாளர்கள் பலரின் இதயம் ஒரு நொடி நின்று போனது மாத்திரமன்றி மன்னிப்பு வழங்கும் தேவ குணமும் நின்றுபோனது மற்றுமொரு உண்மையாகும்.

குண்டி சொகுசுக்கு இந்த அளவு பணம்..

இந்த நாட்டு மண்ணில் பிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமார் 8 கோடி ரூபாய்க்கும் அதிகம் செலவு செய்து குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் சிலவற்றை கொள்வனவு செய்துள்ள நிலையில் ஏனைய சில அமைச்சர்கள் 4 கோடிக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

புதிய அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு 16,500 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதுடன் இராஜாங்க அமைச்சர்களுக்கு அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்யவென 6528.5 லட்சம் ரூபாவும் பிரதி அமைச்சர்களுக்கு வாகன கொள்வனவு செய்ய 5650 லட்சம் ரூபாவும் பொது மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 28 ஆயிரத்து 678 லட்சம் ரூபாய் செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கேன்சர் நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயை குணப்படுத்த ஸ்கேனர் இயந்திரத்தை கொள்வனவு செய்ய பிச்சை எடுக்கும் நாட்டில், வெளிநாட்டில் பெற்ற கடன்களுக்கான தவணை கொடுப்பனவுகளை செலுத்த கஷ்டப்படும் நாட்டில், தேசிய வருமானம் குறைந்து காணப்படும் நாட்டில் அரசியல்வாதிகள் குண்டிகளை சொகுசாக வைத்துக் கொள்ளவென 28 ஆயிரத்து 678 லட்சம் ரூபா செலவு செய்துள்ளார்கள் என்பதை அறியும்போது நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நமக்கு கடும் சலிப்பு ஏற்படுகிறது.

நாய் அசிங்கத்தை உண்பதால் நாமும் அதை உண்பதா..

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே இந்த வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர்கள் தற்போது நோண்டி சாட்டு சொல்லுகின்றனர். அது அப்படியாயின் நல்லாட்சி அரசாங்கம் வந்தது அந்தப் பிழையை அப்படியே செய்து கொண்டு போவதா? இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளார். நல்லாட்சியை கொண்டு வந்த தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக நம்பினார். நாய் அசிங்கத்தை உண்ணுகிறது என்பதற்காக நாமும் அதை உண்பது கேலிக்குரிய விடயமாகும்.

மறுபக்கம் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் வாகன கொள்வனவு குறித்து விமர்சிக்கும் கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதே வாகனங்களை பாவித்துக் கொண்டு முன்னைய அரசாங்கத்திற்கு விரல் நீட்டுகின்றனர். இதன் மூலம் தெரிவது இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை நோக்கி குற்றம் சுமத்திக் கொள்வார்கள்.மொத்தத்தில் தங்களுடைய தனிப்பட்ட சுகங்களுக்காக செயல்படும் பிராணிகளாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

கேவலமான அரசியல் பிரிவினர்..

இலங்கையில் ஏழை மக்களை சுரண்டி சாப்பிடும் பிரதான பிரிவு பணக்காரர்கள் பிரிவு அல்ல. இந்த கேவலமான அரசியல் பிரிவில் உள்ளவர்களே. பணக்காரர்கள் தங்களுக்கு லாபம் பெற்றுக் கொள்வதற்காக குறைந்தளவு பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்வார்கள். ஆனால் இந்த கேவலமான அரசியல் வாதிகள் அப்படி எதையும் செலவு செய்யமாட்டார்கள். இவர்கள் தங்களுடைய முதலீடு என எதையும் செலவு செய்வதில்லை. ஆனால் தேசிய வருமானத்தில் பல மடங்கு பணத்தை தமது சொந்த லாபத்திற்காக செலவு செய்கின்றனர். அது மாத்திரமன்றி நாட்டின் சட்டம் இவர்களுக்கு பொருந்தாது. இதற்காக இவர்கள் செய்வது ஏழைகளை சுரண்டுவது ஆகும். இவர்களுக்குத் தெரிந்த ஒன்று ஏமாற்றுவது மாத்திரமே. இந்த அரசியல் பிரிவில் குறைவாக ஏமாற்றுபவர்களை விட அதிகமாக ஏமாற்றுபவர்களே திறமைசாலிகள். இவ்வாறு கேவலமான அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை 72 வருடங்கள் சுதந்திர பெற்றுள்ள இலங்கையின் புத்திக் கூர்மையான மக்கள் ஒழித்துக்கட்ட முன் வராவிட்டால் எதிர்காலம் கஷ்டமே. தனது தலைக்கு தன் கையே பாதுகாப்பு. வேறு கைகள் அல்ல. தனது கையை கொண்டு தனது புத்தியை பயன்படுத்தாவிட்டால் இந்த நிலையிலிருந்து மாற்றம் அடையவே முடியாது.

விமல் தீரசேகர 

இந்து சமுத்திரத்தில் கண்ணீர் வடிக்கும் கேவலமான அரசியல்வாதிகளின் வாகன கொள்வனவு நாடகம் குறித்த காணொளி முழுமையாக கீழே 

---------------------------
by     (2020-02-10 18:36:09)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links