(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 11 பிற்பகல் 09.35) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பிரபல கூட்டணியின் சின்னமாக 'யானைச் சின்னம்' இருக்க வேண்டும் என இன்று மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வேண்டும் என சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச யானைச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'எனக்கு பொம்மையாக இருக்க முடியாது' என்று கூறிவிட்டு செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் யானைச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய வரலாற்று சாதனையை சஜித் பிரேமதாச ஏற்படுத்தி ஒரு கறைபடிந்த கசப்பான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாசவினால் கட்சி ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் 12.5% சதவீதம் வாக்குகள் பெற வேண்டும் என்ற திட்டத்தை 5% சதவீதம் வாக்குகள் பெறவேண்டுமென்று குறைத்ததால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில் கணக்கிட்டு தெளிவுபடுத்தப்பட்டது. அவ்வாறு நடந்து விட்டதால் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் 112 அல்லாமல் 120 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாகவே சிறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு பெரிய கட்சிகள் தள்ளப்பட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் மலையகத்தின் தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு யானைச் சின்னம் பிரச்சனையாக அமையவில்லை எனவும் அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட மற்றும் இளைய உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர, வஜிர அபேவர்தன, காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, ரங்கே பண்டார, காவிந்த ஜெயவர்தன, லக்ஷ்மன் விஜயமான்ன, நவீன் திசாநாயக்க போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் கிளி மகாராஜாவின் கை பொம்மையான சஜித் பிரேமதாச மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தார். அவர் தனது கூட்டணியின் பெயர் 'சமகி ஜாதிக பலவேக' என்றும் அதன் சின்னம் 'இதயம்' என்றும் தெரிவித்துள்ளார். இந்த பெயரில் உள்ள கட்சியை பணம் கொடுத்து வாங்கி விட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனினும் இதயம் என்ற சின்னத்தை அரசியலில் பயன்படுத்துவது தொடர்பில் பலரும் வேடிக்கையான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
தனது கருத்துக்கு பலர் எதிர்ப்பு என்று அறிந்து கொண்ட சஜித் பிரேமதாச 'நான் முன்னணியின் தலைவர் எனக்கு பொம்மையாக செயற்பட முடியாது' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் கூறிவிட்டு இடை நடுவில் வெளியேறிச் சென்றுள்ளார். அவருக்கு பின்னால் ஹரீன் பெர்னாண்டோ, சுஜீவ சேனசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திராணி பண்டார, ஹர்ச டி சில்வா, கபீர் ஹசிம் போன்ற ஏழு பேர் சென்றனர்.
அதன் பின்னர் தொடர்ந்து இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியாக போட்டியிடும் எனவும் கூட்டணியின் சின்னமாக யானை சின்னம் காணப்படும் எனவும் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
சஜித் பிரேமதாச கூட்டணியின் தலைவர் என்ற போதும் ரஞ்சித் மத்தும பண்டார கூட்டணியின் செயலாளர் என்ற போதும் இதுவரை கூட்டணி ஒன்று உருவாக்கப்படவில்லை. அதற்கு பெயர் வைக்கப்படவில்லை. யாப்பு அல்லது கூட்டணி கட்சிகள் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வில்லை. சஜித் பிரேமதாசவின் கூட்டணி இன்னும் வானத்தில் இருக்கிறது.
---------------------------
by (2020-02-11 16:26:55)
Leave a Reply