வேட்டை அரசாங்கத்தின் நீதிபதி வேட்டை
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 12 பிற்பகல் 09.00) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் போன்றவர்களை அழைக்காமல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மாத்திரம் அழைத்து கூட்டம் நடத்தி தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி விட்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்து அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் வெளிநாடு சென்று 300க்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதை விடுத்து அவ்வாறான நடவடிக்கை எடுப்பதை முழுமையாக மறந்து எந்தவித குற்றச் செயல்களையும் செய்திராத நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவு பிறப்பித்துள்ளமைக்கு எதிராக சட்டத்தரணிகள் இரண்டாவது தினமாக கொழும்பில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புதுக்கடை பிரதான நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் மற்றும் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் அதிகமானோர் கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு இதில் கலந்து கொண்டனர். 'சட்டமா அதிபரின் அழுத்தத்தில் இருந்து நீதிமன்றை சுயாதீனமாக மாற்றுவோம்', 'தப்புல சட்ட மா அதிபரா? பொலிஸ் மா அதிபரா?', 'சட்டமா அதிபர் சட்டத்தை முறிக்கிறார்', 'ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய சட்டமா அதிபரின் கையாட்கள் வெளியில்', 'தப்புலவின் சட்டம் மலர்சாலை', 'கிஹான் மீது பாயும் சட்டம் தில்ருக்ஷி மீது பாயாத சட்டம்', 'தப்புல உடன் பதவி விலக வேண்டும்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி ஒருவர், நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை குற்றவாளிக் கூண்டில் கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உடனான தொலைபேசி குரல் பதிவு இன்றுவரை உண்மையானதா என்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இதுவரையில் இடம் பெற்றும் கைதுகள் சாணனி தொடக்கம் பிலபிட்டிய வரையான பணி நீக்கம் உள்ளிட்ட அனைத்தும் சட்ட விரோதமான செயல்கள் என தெரிவித்தார். அத்துடன் கைது தொடர்பான உத்தரவுகள் நடவடிக்கைகளை பொலிஸ்மா அதிபரே முன்னெடுக்க வேண்டும் எனவும் சட்டமா அதிபர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் குரல் பதிவு குறித்த உண்மை பொய் நிலைமைகளை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனையும் சட்டமா அதிபர் அல்ல போலீசார் செய்ய வேண்டும். நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மீது சுமத்தப்பட்டுள்ளவை குற்றவியல் குற்றங்கள் அல்ல மாறாக ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை என குறித்த சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
நீதிபதி ஒருவரின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம் அல்ல எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சட்டத்தரணி தெரிவித்தார். ஆனால் சட்டமா அதிபர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்கிறார். சட்டமா அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்றம் கூடி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த சட்டத்தரணி லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.
தில்ருக்ஷி டயஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயல்பட்டபோது, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் முப்படை தளபதிகள் சிலர் நீதிமன்றிற்கு வருகை தந்ததுடன் அதன்போது வழக்கு விசாரணை செய்த நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிணை தண்டப் பணம் அறிவிட்டதுடன் அதனை செலுத்துவதற்கு கால தாமதம் ஆனதால் கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்ற கூண்டில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதன்போது 'இராணுவ வீரர்கள் நீதிமன்றில் சிறை வைக்கப்பட்டனர்' என்று அப்போதைய ஜனாதிபதி சிறிசேனா 'சயநெட் கதை' ஒன்றை கூறினார். இன்று அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையே கிஹான் பிலப்பிட்டிய மீது பாய்ந்துள்ளதாக நீதிமன்றத் துறையில் உள்ள சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
படங்கள் லங்காதீப
---------------------------
by (2020-02-13 16:06:29)
Leave a Reply