-ஜெயிலர் பொட்டா வெளியீடு-
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 13 பிற்பகல் 07.20) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கொழும்பு வெலிக்கடைை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். முன்கூட்டியேே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெமரா கலைஞர்களுடன் அல்லாமல் கோட்டாபய சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தால் அது மிக சிறப்பாக இருந்திருக்கும். எனினும் கோட்டாபய ராஜபக்ச காணாத அல்லது கண்டும் காணாததுபோல் இருந்தாரா என்று அறியாமல் சிறைச்சாலைக்குள் அதிகரித்துச் செல்லும் அபாயமான ஒரு பகுதி தொடர்பில் கோட்டாபயவிற்கும் நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை என்ற Colombo Remand Prison (CRP) இடம் இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்படுத்தப்படும் தலைமையகம் ஆகும். இதுவரை காலமும் நான்கு பிரதான குழுக்களால் செயல்படுத்தப்பட்டு வந்த போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு நடவடிக்கைகள் நந்தசேன கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த செயற்பாடுகள் துமிந்த சில்வா, தெமட்டகொட சமிந்த, தெமட்டகொட ருவான் மற்றும் கொஸ்கொட தாரக்க ஆகியோரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (CRP) மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியவற்றை முழுமையாக இந்த குழுவினரே நிர்வகிக்கின்றனர். சிறைச்சாலை அதிகாரிகள் இவர்களின் வசதி அளிப்பாளர்களாகவே செயல்படுகின்றனர். இதற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தேவையான வரப்பிரசாதங்கள், பணம், சலுகைகள் வேண்டிய அளவு கிடைக்கின்றன.
அனைத்து சிறைக் கைதிகளுக்கும் ஒரே அளவான சலுகைகள் வழங்கப்பட வேண்டிய நிலையில் துமிந்த சில்வா குழுவினருக்கு மாத்திரம் அதி சொகுசு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வீட்டிலிருந்து உணவு, எந்த ஒரு நேரத்திலும் பார்வையிடும் வசதி, தொலைபேசி மற்றும் இணையதள வசதிகள் மாத்திரமன்றி புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர் இரவு வேளைகளில் வீட்டிற்குச் சென்று பெண்களை சந்தித்து மீண்டும் சிறைச்சாலைக்கு வருவதற்குக் கூட இவர்களுக்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா அண்மையில் அவரது பிறந்த தினத்தை தனது வீட்டிலேயே கொண்டாடினார்.
மகசின் விளக்கமறியல் சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி சமந்த அழககோன், உதவி சிறைச்சாலை அதிகாரி சம்பத் வர்ணகுலசூரிய, பிரதான ஜெயிலர் அரவிந்த ஆகிய அதிகாரிகளே துமிந்த சில்வா குழுவினருடன் இணைந்து உறவு கொண்டாடி வருகின்றனர்.
துமிந்த சில்வா குழுவின் சிறைச்சாலை சண்டியர் என அழைக்கப்படும் கொஸ்கொட தாரக்க என்பவர் மெகசின் சிறைச்சாலையில் தனது பாதாள உலகக் குழுவின் பலத்துடன் தொடர்ந்து இருந்து வருகிறார். தென் மாகாணத்தில் நடைபெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கொஸ்கொட தாரக்க என்பவர் பூஸா சிறைக்கு மாற்றப்பட இருந்த போதும் தனது பாதாள உலகக் குழுவின் பலத்துடன் தொடர்ந்து மெகசின் சிறைச்சாலையில் இருக்கிறார். பூஸா சிறைச்சாலைக்கு கொஸ்கொட தாரக்கவை மாற்றுவதற்கான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் தனது பாதாள உலகக் குழு பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மெகசின் சிறைச்சாலையில் இருந்து துமிந்த சில்வா குழுவினரின் போதைப் பொருள் கடத்தல் விடயங்களை தனது பாதாள உலகக் குழுவின் ஊடாக செயல்படுத்தி வருகிறார்.
கொஸ்கொட தாரக்க என்பவர் அண்மையில் சிறையிலிருந்து ஆயுதம் ஒன்றை எடுத்துச் சென்று மற்றும் ஒரு சிறைக் கைதியை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனை சிறைச்சாலை அதிகாரிகள் நேரடியாக வாய் பார்த்துக் கொண்டிருந்தனர். சட்டம் கேடு கெட்டு போய் இருப்பதால் சில நேர்மையான அதிகாரிகளும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேர்மையாக செயற்படும் அதிகாரிகளின் வீட்டிற்கு பாதாள உலகக் குழுவினர் சென்று குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவதும் இந்த விடையங்களை செய்தியாக வெளியிடும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் சாதாரணமாக இடம்பெற்று வருகிறது. அதனால் பலர் அமைதியாகவே இருக்கின்றனர். அந்த அளவிற்கு துமிந்த குழுவினரின் பாதாள செயற்பாடுகள் சிறைச்சாலைக்குள் உச்ச நிலை கொண்டுள்ளது.
அண்மையில் சிறைச்சாலை வரலாற்றில் முதல் தடவையாக சிறைக் கைதி ஒருவர் மற்றும் ஒரு சிறை கைதியை சயினைட் ஊசி ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். சயினைட் ஊசி ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட சமந்த பெரேரா என்ற 'சூவ சமந்த' என்பவரும் துமிந்த அணியினரின் பாதாள உலகக் குழு உதவியாளர் ஆவார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறை கைதி வேறு ஒரு சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் கொலை முயற்சியில் ஈடுபட்ட சூவ சமந்தவுக்கு எதிராக சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. துமிந்த சில்வா மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோரின் பலத்தினால் சமந்த தண்டிக்கப்படவில்லை.
உலகில் இவ்வாறான கொடூரமான சம்பவங்களை தென் அமெரிக்காவின் கொலம்பியா, மெக்சிகோ போன்ற பிரதேசங்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறைச்சாலையிலேயே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இன்று இலங்கையில் சிறைச்சாலை இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள இந்த குழுவை விட இலங்கையில் உள்ள குழு விசேட இடத்தைப் பெறுவதற்கு காரணம் துமிந்த சில்வாவின் 'கெட்போய்ஸ் காட்டெல்' பாதாள உலக குழு தொலைக்காட்சி சேவை ஒன்றினை கொண்டிருக்கும் ஒரே ஒரு பாதாள குழுவாகும்.
அண்மைக்காலமாக சிறைச்சாலையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பிரபல வியாபாரி ஆகியோர் இந்த 'கெட்போய்ஸ் காட்டெல்' குழுவினர் உடனேயே இருந்துள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்று வெளியில் வந்த கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி துமிந்த மற்றும் சமிந்த ஆகிய 'பிள்ளைகள்' தொடர்பில் மிகவும் கவலையுடன் கருத்துக்களை வெளியிட்டார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் இருந்து வந்தவுடன் சென்று சந்தித்த கலகொட அத்தே ஞானசார தேரர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு நேரடியாக கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் பொலிஸ் சேவையில் இருந்த போது தனது உயர் அதிகாரியின் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட 'பிரியவங்ச' என்ற மாகல்கந்தே சுதந்த தேரர் துமிந்த சில்வாவை கடவுள் அவதாரம் என்றும் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் எனவும் அண்மைக் காலமாக கூறி வருகிறார் என்பது விசேட அம்சமாகும். இவர்கள் 'கெட்போய்ஸ் காட்டெல்' அணியுடன் இணைந்தே செயல்படுகின்றனர்.
மேற்கூறிய வியாபாரி துமிந்த சில்வா என்ற சிறையிலிருக்கும் பூனைக்கு கோழி இறைச்சி கொடுக்கும் அப்பாவி ஆவார்.
மேற்கூறிய அனைத்து விடயங்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது துமிந்த சில்வாவின் பாதுகாப்பில் இருக்கும் தெமட்டகொட சமிந்த, தெமட்டகொட ருவான், கொஸ்கொட தாரக்க போன்ற பிரபல 'கெட்போய்ஸ் காட்டெல்' பாதாள உலகக் குழு அரசியல், ஊடகம், மதம் ஆகியவற்றின் அதிகாரங்களை கொண்டு இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தையும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளையும் நிறுத்தாமல் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர உதவி செய்த நபர்களின் பெயர்கள் இந்த தகவல்களில் இருக்கின்ற போதும் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு உண்மையான எண்ணம் இருந்தால் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்த கொடூரமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால்தான் கோட்டாபய ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பிரதிபலன் நாட்டு மக்களை சென்றடையும்.
---------------------------
by (2020-02-13 23:04:34)
Leave a Reply