எழுத்து சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 16 பிற்பகல் 09.45) சுமார் 260 மில்லியன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின் பிரதான சூத்திரதாரியாக பெயரிடப்பட்டுள்ள நபர் ஒருவரை நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கூறினால் இந்த விடயம் எந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது என சட்ட வல்லுனர்களும் நாட்டு மக்களும் கேள்வி எழுப்பாமல் இருக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதற்கான சரியான பதில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள முத்து என அழைக்கப்படும் இலங்கை நாடு என்பதாகும்.
நீதிபதி பிரசன்ன ஜெயவர்தனவின் மறைவை அடுத்து வெற்றிடமான உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த யஸந்த கோதாகொட நியமிக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் யாப்பு சபைக்கு ஒருவரின் பெயரை மாத்திரமே பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார். மேலே நாம் குறிப்பிட்ட கதையின் கதாநாயகன் என்று அழைக்கப்படும் ஏ.எச்.எம் திலீப் நவாஸ் என்பவரின் பெயரே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக அரசியல் யாப்பு சபை குறித்த நபரின் பெயரை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு அறிவித்தால் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக திலீப் நவாஸ் நியமிக்கப்படுவார். இந்த மிக மோசமான மோசடி நியமனம் தொடர்பில் சட்டத்துறையில் உள்ள எவரும் இதுவரையில் வாய் திறக்காமல் இருப்பது புதுமையாக இருக்கிறது.
திலிப் நவாஸ் என்பவர் இந்த உலகத்தில் நாம் அறிந்த வகையில் சட்டத் திருடன் என்று கூறுவதற்கு கீழுள்ள விடயங்கள் காரணமாக அமைகின்றன.
திலிப் நவாஸ் என்பவர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நியமிக்கப்பட்டார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயல்பட்ட திலீப் நவாஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பில் விசேட திறமை பெற்றவர். அந்தக் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் இல்லாத காரணத்தினால் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ஜனாதிபதியின் தனித் தெரிவில் நியமிக்கப்பட்டனர். அக்காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கக் கூடிய தகுதி வாய்ந்த 18 பேர் இருந்த நிலையில் அவர்களை பின் தள்ளி வைத்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திலீப் நவாஸை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். இதனை வைத்தே திலீப் நவாஸ் எந்த அளவு ராஜபக்ச விசுவாசி என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அப்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயல்பட்ட திலீப் நவாஸ் மீது லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அக்காலத்தில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக எம் எம் சி பெர்டிநேன்டோ செயல்பட்ட போது லெகோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட 260 மில்லியன் ஊழல் மோசடி தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றது. பாரியளவு நிதி மோசடி தொடர்பான விடயம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை ஆரம்பித்தபோது அதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அப்போது சட்டமா அதிபராக ஈவா வனசுந்தர செயல்பட்டார். சட்டமா அதிபர் ஈவா வனசுந்தரவிற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரின் கடிதம் கிடைக்க பெறுவதற்கு முன்னர் அதனை தன் வசப்படுத்திக் கொண்ட திலீப் நவாஸ் ஈவா வனசுந்தர போன்று குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பதில் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் 'இந்த விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதிலால் புதுமை அடைந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபர் ஈவா வனசுந்தரவை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் அவ்வாறு ஒரு பதிலை அனுப்பவில்லை என்றும் குறித்த விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லக்கூடியதே என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சட்டமா அதிபரின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து கடிதம் அனுப்பிய திலீப் நவாஸ் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணைகள் மூலம் லெகோ நிறுவனத்தின் 260 மில்லியன் ஊழல் மோசடியில் பிரதான நபராக திலீப் நவாஸ் காணப்படுகின்றமை தெரியவந்தது.
இந்த விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஈவா வனசுந்தரவிற்கு பதிலாக சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். அப்போது பிரதம நீதியரசராக செயல்பட்ட மொஹான் பீரிஸ் மற்றும் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் உறவினர்கள் என்பதால் மொஹான் பீரிஸின் அழுத்தம் காரணமாக திலீப் நவாஸ் தொடர்பான விசாரணைகள் குப்பைக்குள் வீசப்பட்டன. இதற்கு திலீப் நவாஸ் மற்றும் மொஹான் பீரிஸ் ஆகியோருக்கு இடையில் காணப்பட்ட நீண்ட கால நட்பும் காரணமாகும். 260 மில்லியன் ரூபா மோசடி செய்து சட்டமா அதிபர் போன்று அதிகார துஷ்பிரயோகம் செய்து கடிதம் அனுப்பி ஊழல் செய்த திலீப் நவாஸ் குறித்த விசாரணைகளில் இருந்து அப்போது தப்பித்துக் கொண்டார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவினால் திலிப் நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கூறிய லெகோ நிறுவன நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த விசாரணைகள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் போது குறிப்பிட்ட 260 மில்லியன் நிதி மோசடியுடன் திலீப் நவாஸிற்கும் தொடர்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிரதான சந்தேக நபராக பெயரிடப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரியும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது. வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் திலீப் நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். அதனால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரவீர மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் இருந்து திலீப் நவாஸை இடைநிறுத்தி வைத்தார். அதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற யசந்தா கோதாகொடவும் திலீப் நவாஸை வழக்கு விசாரணைகளுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இன்றுவரை திலீப் நவாஸ் எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. சுமார் இரண்டு வருட காலமாக வழக்கு விசாரணை காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த திலீப் நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது கின்னஸ் சாதனையாகும்.
திலிப் நவாஸ் என்பவர் மற்றும் ஒரு புதுமையான சட்டத் திருடன் ஆவார். அவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 80க்கும் அதிகமான வழக்குகளுக்கு வழக்குத் தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கவில்லை. பகிரங்க நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதும் அதனை கோவைகளில் எழுதுவதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும் முடியவில்லை. இதிலிருக்கும் விசேட அம்சம் குறித்த வழக்கு தீர்ப்புடன் தொடர்புடைய கோவைகள் காணாமல் போயுள்ளன. ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்க வந்த வேலைசெய்யும் வீரர் நாட்டின் மேன்முறையீட்டு தலைமை நீதிபதியாக இவ்வாறான திருடனையே நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.
*திலீப் நவாஸ் தொடர்பான மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இதோ. சட்டக் கல்லூரியின் ஊடாக நடத்தப்படும் சட்ட மேல் பட்டப்படிப்பு என்ற எல்எல்பி பட்டத்திற்கான பரிட்சை நடத்தப்படும் குழுவின் உறுப்பினராக திலீப் நவாஸ் செயற்பட்டுள்ளார். இதன்போது பரீட்சைக்கு தோற்றாத நபர் ஒருவரை மோசடியான முறையில் சித்தியடைந்த நபராக இணைத்துள்ளார். சக பரீட்சார்த்திகள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதால் மூடி மறைக்கப்பட இருந்த இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் பரீட்சையில் தோற்றிய ஏனைய நபர்கள் திலீப் நவாஸுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த சந்தர்ப்பத்திலும் திலீப் நவாஸை காப்பாற்ற வந்த மொஹான் பீரிஸ் தண்டனை வழங்குவதற்கு பதிலாக பரிட்சை குழு உறுப்பினர் பதவியிலிருந்து மாத்திரம் திலீப் நவாஸை அகற்றினார்.
*திலீப் நவாஸ் என்பவர் எந்தளவு மனநோயாளி என்பதை இவர் மீதான மற்றுமொரு குற்றச்சாட்டிலிருந்து அறிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில் திலீப் நவாஸ் அரச சட்டத்தரணியாக அம்பாறை பிரதேசத்தில் செயல்பட்டு வந்தார். ஒருமுறை சட்டமா அதிபர் போன்று தொலைபேசியில் கதைத்து அவசரமாக கொழும்பிற்கு அழைத்துள்ளதாக அம்பாறை அரச போக்குவரத்து சபை அலுவலகத்தில் இருந்து தனியாக பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொழும்புக்கு வந்துள்ளார். அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி தனியாக வந்த அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் கொடுப்பனவு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது திலீப் நவாஸ் செய்த மோசடி தெரியவந்தது. அப்போது அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் திலீப் நவாப் காப்பாற்ற சட்டமா அதிபராக செயல்பட்ட மொஹான் பீரிஸ் முன்னிலையானார்.
சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பில் புலமை பெற்றிருந்த போதும் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றது மேற்கூறப்பட்டதில் காணப்படும் ஊழல்வாதி, மோசடிக்காரர், திருடர் என்பதே உண்மை.
இவ்வாறான நியமனங்கள் மூலமாக நாட்டின் நீதிமன்றம் தொடர்பிலும் நாட்டு மக்கள் தொடர்பிலும் சர்வதேசத்தில் உள்ள கௌரவம் இல்லாமல் போவது தொடர்பில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபயவும் அரசியல் யாப்பு சபையும் பொறுப்புக் கூற வேண்டும்.
---------------------------
by (2020-02-16 23:43:02)
Leave a Reply