(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 20 பிற்பகல் 11.00) இலங்கை நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நந்தசேன இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த சிறிசேனவை தோற்கடித்து கேலிக்குரிய நபர் என நிரூபித்து 14ம் திகதி காதலர் தினத்தன்று வெளியிட சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்துள்ளார்.
ஜனாதிபதி நந்தசேன வெளியிட்ட சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்து பாற் சோறு பொங்கி பட்டாசு வெடித்து சாய்ந்தமருது மக்கள் கொண்டாடிய நிலையில் வெடித்த பட்டாசுகளின் கடதாசிகள் நிறம் மாறுவதற்கு முன்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நந்தசேன ரத்து செய்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களிடம் இனவாதம் கதைத்து நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்சக்கள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு புதிதாக நகர சபை ஒன்றை வழங்கியமை மிகவும் பாரதூரமான விடயமாக அமைந்தது. எனினும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகர சபை வழங்கியமை தொடர்பில் எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை.
இருந்த போதும் வெறும் ஆறு நாட்களே இயங்கிய நகர சபையாக ஜனாதிபதி நந்தசேனவின் சாய்ந்தமருது நகர சபை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
எனினும் ஜனாதிபதி நந்தசேன முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை தோற்கடித்து முட்டாள்தனமான கேலிக் கூத்துக்களை அரங்கேற்றி வருவது சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து மாத்திரமல்ல. ஜனாதிபதி ஐரிஎன் தொலைக்காட்சிக்கு சுதர்மனை நியமித்தார். பின்னர் அதனை ரத்து செய்தார். சிறிது நாட்களின் பின்னர் மீண்டும் அதே பதவிக்கு சுதர்மனை நியமித்தார். இலங்கை வானொலி சேவைக்கு கைதட்டும் தலைவர் ஒருவரை நியமித்தார். மூன்று நாட்களின் பின்னர் அவருடைய நியமனத்தை ரத்து செய்தார். இராஜாங்க அமைச்சர்களை நியமித்தார். சில நாட்களுக்குப் பின்னர் ஒருசில ராஜாங்க அமைச்சர்களுக்கு மாத்திரம் அமைச்சுகளுக்கு பொறுப்பான நிறுவனங்களை அறிவித்தார். ஏனைய அமைச்சர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சர் இல்லாமல் பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமித்துள்ளார். முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஐரோப்பிய உடையில் வருகை தந்தார். நாட்டினுடைய தேசிய சுதந்திர தினத்திற்கு மீன் கடைக்கு செல்வது போல உடை அணிந்து வந்தார். அது மத்திரமன்றி மீன் கடைக்கு செல்வது போன்ற ஆடையில் இராணுவ சின்னங்களை அணிந்து இருந்தார். ஐயோ..!
வந்தது வேலை செய்யும் வீரர் என்று சொல்லிக்கொண்டு ஆனால் இப்போது வேலைகளை குழப்பி அடிக்கும் வீரராக மாறியுள்ளார்.
---------------------------
by (2020-02-21 06:13:04)
Leave a Reply