(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 21 பிற்பகல் 12.40) இலங்கைக்கு டிஜிட்டல் உலகை வெற்றிகொள்ள முடியாமைக்கான பிரதான தடையாக இணைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் 'டேட்டா மாபியா' காரணமாக இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் குறித்து இலங்கைப் பிரஜைகள் பலர் இணையத் தளங்கள் ஊடாகவும் பல வழிகளிலும் கோரிக்கைகளை முன்வைத்து விமர்சனங்கள் செய்தபோதும் அதற்கு உரிய தீர்வினை வழங்குவதற்கு குறித்த இணைய வசதி அளிக்கும் நிறுவனங்களும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விசேடமாக இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் இணையதள வேகத்தை சரியான முறையில் வழங்காது (50 வீதம் தொடக்கம் 70 விவேகம்) குறைந்தளவு வேகத்திலேயே வழங்கி வருகின்றனர்.9 அத்துடன் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இரவு 12 மணிக்கு பிறகு வழங்கப்படும் இலவச டேட்டா (Night Time Data) திட்டத்தின் போதும் மிகவும் குறைந்தளவு வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து இணையதள பாவனையாளர்களின் நலன்கள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இலகுவான முறையில் இணைய வசதிகளை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு நிறுவனங்கள் செயற்படக்கூடிய வகையிலும் உரிய அதிகாரிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் யசிறு குருவிட்டகே மெத்திவ்
தலைவர்
---------------------------
by (2020-02-22 05:44:31)
Leave a Reply