(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 01.40) நான் வெளிநாட்டில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தேன். கொரோனா வருவதானால் இலங்கைக்கு தொகை தொகையாக வரும் விதத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரவு நாள் ஒன்றில் கண்டேன். இதனால் காணப்படும் கடும் அபாயம் குறித்து உணர்ந்த நான் லங்கா ஈ நியூஸ் ஊடாக இதனை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க நினைத்தேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளிடம் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிடுமாறு விண்ணப்ப படிவம் ஒன்று சுகாதார அதிகாரிகளால் வழங்கி வைக்கப்படுவது புதுமையான விடயமாக இருக்கிறது. பயணிகள் கமராவிற்கு முன்னால் சென்று நிற்பவர்கள் பரிசோதனை திரையை பார்க்கின்றனர். அப்போது குறித்த பயணியின் உடலில் காணப்படும் வெப்பத்தின் அளவு தொடர்பில் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனாலும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வினாப்பத்திரம் வழங்கப்படுவது புதுமையான விடயமாக உள்ளது.
வரும் பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விமான நிலையத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் இருவரிடம் ஒப்படைக்க வேண்டும். என்னை கண்ட நபர் "ஆம் மாத்தியா நீங்கள் இலங்கையர் தானே செல்லுங்கள்.. செல்லுங்கள்.." என்றார். தற்போது இத்தாலியிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இத்தாலியில் பல இலங்கைர்கள் வசித்து வருகின்றனர். ஆனாலும் இந்த சுகாதார அதிகாரிகள் அது குறித்து கவனம் செலுத்தவில்லை.
சீனப் பிரஜைகளுக்கு பதிலளிக்க வழங்கப்படும் வினா பத்திரம் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வினா பத்திரத்தில் எந்த நாடு, எந்த மாகாணத்திற்கு விஜயம், வைரஸ் தொற்று போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பயணி ஒருவர் அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்தவுடன் அதனை வாசிக்காமலே சுகாதார அதிகாரிகள் அருகில் உள்ள பெட்டியில் அதனை போடுகின்றனர். இதில் இருக்கின்ற கேலிக்கூத்தான விடயம் குறித்த இரண்டு சுகாதார அதிகாரிகளுக்கும் சீனா மற்றும் ஆங்கில மொழிகள் தெரியவில்லை. இவர்கள் சீன பிரஜைகளுடன் புரியாத மொழியில் பேசுகின்றனர். இதுவும் மிகவும் கேலிக்குரிய விடயம். சீன பிரஜைகள் அனைவரும் குறித்த வினா பத்திரத்தை சீன மொழியிலேயே நிரப்பி கொடுக்கின்றனர். சுகாதார அதிகாரிகளுக்கு அதனை வாசித்து விளங்கிக் கொள்ள முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகில் உள்ள பெட்டியில் வாங்கி போடுகின்றனர். இவ்வாறான முறைமையின் கீழ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் இலங்கையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
இது தொடர்பில் நான் குறித்த சுகாதார அதிகாரிகளிடம் வினவிய போது குறித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் அதனை வாங்கிய பெட்டியில் போடுவது மாத்திரமே தங்களது கடமை என அவர்கள் தெரிவித்தனர். அப்படியானால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் நுழைந்த பின்னரே சுகாதார அமைச்சினால் அவரை கண்டுபிடிக்க முடியும்.
சீனா கொரோனா வைரசுக்கு எதிராக வைத்திய சேவைகள் ஊடாக மாத்திரம் போராடவில்லை. மிக மோசமான மனிதாபிமான அழிப்பின் ஊடாகவும் போராடுகிறது. இது தொடர்பில் இணையத்தள காணொளிகள் ஊடாக பல ஆதாரங்கள் வெளிவந்து உள்ளதால் நான் மேலதிகமாக ஒன்றும் கூறவில்லை. இதன் காரணமாக பல சீன பிரஜைகள் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதன் காரணமாகவே தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சுமார் 4 லட்சம் சீன பிரஜைகள் வசிக்கும் இலங்கைக்குள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் வினா பத்திரத்தில் சரியான விடையை அளிப்பார் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கும் என்றால் இலங்கை நாட்டிற்கு சரணம் தான்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் இந்த கேலிக்கூத்தான விடயத்துக்கு மேலதிகமாக ஒழுக்கமற்ற வகையில், பயணிகள் அனைவரும் வரிசைக்கிரமமாக அழைக்கப்படுவதற்கு பதிலாக அனைவரும் கொத்துக் கொத்தாக ஏற்கப்படுகின்றனர். அந்த இடத்தில் தள்ளுமுள்ளு இடம்பெறுகிறது. இந்த இடத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காணப்பட்டால் அங்குள்ள அனைவருக்கும் அது பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையை வெளிப்படுத்துவதற்கு காரணம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு மாத்திரமே ஆகும். நாட்டில் பல நிறுவனங்களும் திடீரென புகுந்து செல்லும் ஜனாதிபதி நந்தசேன தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு முறை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றால் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.
---------------------------
by (2020-03-07 07:04:33)
Leave a Reply