(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 8 பிற்பகல் 04.00) கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தாமரை மொட்டு கட்சியை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லவென பாரிய சேவைகளை ஆற்றிய பிக்குகள் அடங்கிய அணி வேறு கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கென குறித்த பிக்குகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றையும் அதன் சின்னத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
லங்கா ஈ நியூஸ் உள்ளக சேவைக்கு வரும் தகவலின் அடிப்படையில் பிரதான தேரர்களும் குறித்த கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் இருப்பதாக அறியமுடிகிறது.
ராஜபக்ஸாக்களுக்காக கடந்த காலத்தில் கடைக்குச் சென்ற பிக்குகள் அணி ராஜபக்சவின் நான்கு மாத கால ஆட்சியில் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக சில விடயங்களை முன்வைத்து பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ராஜபக்சவின் ஆட்சியில் அந்த விடயங்கள் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
1. வில்பத்து காடு அழிப்பை நிறுத்தி வன வளத்தை பாதுகாத்தல்
2. ரிஷாத் கைது பதியுதீனை கைது செய்தல்
3. ஞாயிறுு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்தல்
4. இராணுவத்தினருக்குு சலுகை வழங்குதல்
5. புதையல்கள் மற்றும் காடுகளை பாதுகாத்தல்
6. அரசாங்கத்தின்் காணி மற்றும் சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பதை தடைை செய்தல்
7. பிக்குகள் அணி பிரதானிகள் மற்றும் அவர்களால்் முன்னிறுத்தப்படும் நபர்களுக்கு பொறுப்புடைய பதவிகள் வழங்குதல்
எனினும் பிக்குகள் அணியின் எதிர்பார்ப்பை ஈடு செய்யாது ராஜபக்சக்கள் மாறான விடயங்களை செய்தனர்.
01.வில்பத்து வனத்தை பாதுகாப்பதற்கு பதிலாக மேலும் 100 ஏக்கர் காணியை அளித்து கோமாரி செய்கைக்காக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. சுற்றாடலை பாதுகாப்பதற்கு பதிலாக சுற்றாடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மண் மணல் அகழ்வு போன்றவற்றிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கினர். இதன் மூலம் தனது வியாபார கைக்கூலிகளுக்கு நாட்டின் இயற்கை வளத்தை சூறையாடும் வாய்ப்புகளை ராஜபக்சக்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர். முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை செய்தனர்.
02. ரிஷாத் பதியுதீனை கைது செய்யவில்லை. ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை ராஜபக்சக்கள் தேர்தலுக்காகவே ஏற்படுத்தியுள்ளனர் என்பதை பிக்குகள் அணி நம்பவில்லை. ஆனால் உண்மையில் நடப்பது அதுதான்.
03. ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் உடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதை விடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அது மாத்திரம் அல்லாமல் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளராக நியமித்தனர்.
04. இராணுவ வீரர்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் ஒன்றும் கிடைக்கவில்லை. அத்துடன் இன்னும் அவர்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இராணுவ வீரர்களுக்கு வழங்கிய வாக்குறுதி குறித்து கதைப்பதற்கு இன்று யாரும் இல்லை.
05. புராதன இடங்களை பாதுகாப்பதற்கு பதிலாக இன்றைய தினம் பதிவான செய்தி ஒன்றின்படி லங்காபுரி சிங்கராஜகம வெட்டகாடு பிரதேசத்தில் காணப்படும் புராதான இடத்தை டோசர் கொண்டு அழித்து விவசாய நிலமாக மாற்றி உள்ளனர். இந்த வனப்பகுதியில் இருந்த 10,000 ஏக்கர் மரங்களுக்கு தீ வைத்து நாசமாக்கி உள்ளனர். இந்த தகவலை ஓனேகம மெதமலுவ மகா விகாரையின் நிக்கபிட்டியே சந்திம தேரர் தெரிவித்துள்ளார். வன வளத்தை பாதுகாப்பதாக வந்த ஆட்சியாளர்கள் ராஜபக்சவின் கைக்கூலிகளை கொண்டு இதுவரையில் முக்கியமான 5 வனப்பகுதிகளை அளித்துள்ளனர். மித்திரிகல வனம், சுன்னக்கரை வனம், பரலிய முக்கலான வனம், தியபட வனம் மற்றும் ஒருகல யாய ஆகிய வனத்தை அளித்துள்ளனர். நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்புக்கென இராணுவத்தினரை வீதியில் இறக்கி படம் காட்டும் இந்த அரசாங்கம் புராதான இடங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகள் பாதுகாப்பது குறித்த விடயங்களில் அசமந்தப் போக்கை கடைபிடித்து வருகிறது.
06. வெளிநாட்டவர்களுக்கு அரச காணிகள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதை தடை செய்வதற்கு பதிலாக ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்த முதலாவது வாரத்திலேயே கொழும்பு பாலதக்சஷா மாவத்தையில் வாவிக்கு பின்னாலுள்ள இடம் மற்றும் செங்ரிலா ஹோட்டலுக்கு பின்னாலுள்ள அரச காணி என்பவற்றை பெரனியல் ரியல் எஸ்டேட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 43 மில்லியன் டாலர் பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். புறக்கோட்டையில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பதற்கான திட்டங்கள் வரிசையாக இருக்கின்றன.
07. ராஜபக்சக்கள் தங்களைை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர பெரிதும் உழைத்தார் பிக்குகள்் அணி கூறுவதைை ஆட்சிக்கு வந்த பின் 5 சதத்துக்கு கூட கணக்கில் எடுக்கவில்லை. குறித்த பிக்குகளுக்கு எவ்வித பதவிகளும் வழங்கவில்லை என்பதோடு அவர்கள் முன்மொழிந்த நபர்களுக்கும் பதவிகள்்் எதையும் வழங்கவில்லை.
எனவே தேர்தல் காலத்தில் பொது மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை காப்பாற்ற முடியாமல் பிக்குகள் அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. மேலும் ராஜபக்ச அணியின் செயற்பாடுகளில் அதிர்ச்சி அடைந்துள்ளது. இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அதனால் வேறு கட்சி ஒன்றின் ஊடாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
பிக்குகள் அணியின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்து கொண்ட மெதமுலன ராஜபக்ஷ அணி அதிர்ச்சி அடைந்துள்ளது. அதனால் பிக்குகள் அணி அரசியலுக்கு வருவதை தடுக்கும் வகையில் போதனைகளை செய்யுமாறு சில தேரர்களுக்கு தொலைபேசி மூலமாக அழைத்து கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் சில மகாநாயக்க தேரர்கள் பிக்குகள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் 7ஆம் திகதி ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
கேள்வி - பாராளுமன்றிற்கு தேரர்கள் அவசியமில்லை என தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறதே?
பதில் - எனக்கு தெரியாது இவர்களுக்கு கடவுளால் அவ்வாறு செய்தி அனுப்பப்பட்டு உள்ளதா என்று. யாருக்கு அப்படி சொல்ல முடியும்? பிக்குகள் என்பவர்கள் மனித உரிமைகள் உடைய நபர்கள். தலையில் முடி இல்லாத ஒரு பிரிவினர். இவ்வாறு கருத்து கூறுபவர்களுக்கு ஒன்றைக் கூறி வைக்க வேண்டும். நாங்கள் பிக்குகள் ஆக மாறும் போது எங்கள் முடிகள் மாத்திரமே வெட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும். எங்களுடைய மனித உரிமைகள் வெட்டப்படவில்லை. பிக்குகள் அரசியலில் இருந்து விலக வேண்டும் என யாராவது கூறுவார்களானால் மிகவும் தவறான ஒன்றாகும். இன்று தாய்லாந்தில் என்ன நடந்துள்ளது என்பது எமக்கு தெரியும். இந்த அனைத்து நபர்களுக்கும் பிக்குகளின் உடைய அரசியல் உரிமை மற்றும் அரசியலிலிருந்து அவர்களை துடைத்து எறிவது நோக்கமாக இருக்கிறது. நான் கண்டேன் சில மகாநாயக்க தேரர்கள் அவ்வாறு கூறுகின்றனர். அதுகுறித்து கவலை அடைகிறோம். யாருக்கும் சட்டம் போடுமாறு மகாநாயக்க தேரர்களுக்கு கூற முடியாது. பிக்குகள் அரசியலில் வருவது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும். நாம் தேர்தலுக்கு வருவதாக இல்லையா எவ்வாறு அரசியல் செய்வது என்பதை பிக்குகள் ஆகிய நாமே தீர்மானிக்க வேண்டும். நமக்கு மற்றவர்கள் சட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் பிக்குகள் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். அது வேறு கதை. அதனால் தவறான கருத்துக்களை வெளியிடக் கூடாது.
---------------------------
by (2020-03-09 10:16:19)
Leave a Reply