~

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரச அதிகாரியை கைது செய்ய முடியாத பதில் பொலிஸ் மா அதிபர் பயங்கரவாதத்தை முறியடிப்பது எவ்வாறு? ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பகுதி அளவு நீதிமன்ற அதிகாரம் கூட கிடையாது - மூன்று நபர்கள் அடங்கிய மேல் நீதிமன்றம் உறுதியான நிலைப்பாட்டில்

நந்தசேன ஆணைக்குழு மூலம் நீதிமன்றத்தை அழித்தல்

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 10 பிற்பகல் 09.45) நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரச அதிகாரி ஒருவரை கைது செய்ய முடியாத பதில் பொலிஸ் மா அதிபர் கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில்ஆராய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபயவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தும் இன்னும் அவர் கைது செய்யப்படாமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரத்ன மீது குற்றம் சுமத்திய மூன்று நபர்கள் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அவரை கைது செய்ய முடியாவிட்டால் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சட்டவிரோதமாக ஐந்து குட்டி யானைகளை தன்வசம் வைத்து விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பியல் சமரப்புலிகே நிராஜ் ரொஷான் என்ற அலி ரொஷானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பத்தாம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விக்கும் கலுஆராச்சி, தம்மிக்க கனேபொல மற்றும் ஆதித்திய கே. பட்டபெதிகே ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் குறித்த வழக்கின் கோவைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதால் குறித்த விசாரணை கோவைகளை நீதிமன்றத்துக்கு எடுத்து வருமாறு ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது. எனினும் குறித்த அழைப்பாணையை கணக்கில் எடுக்காது ஆணைக்குழுவின் செயலாளர் நீதிமன்றில் ஆஜராக வில்லை. எனவே ஆணைக்குழு செயலாளரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கடந்த 6 ஆம் திகதி மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழு உத்தரவு பிறப்பித்தது. எனினும் பத்தாம் திகதிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவில்லை. 

ஆணைக்குழு தலையீடு..

கொழும்பு மேல் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினரால் விடுக்கப்படும் உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபருக்கு தகவல் அனுப்பி உள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, தமது ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரை நீதிமன்றத்தில் சாட்சியாளராக பெயரிடுவது மற்றும் அழைப்பு விடுப்பது 'பூரணமாக அதிகாரத்தை மீறிய செயல்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயலாளர் இதுவரையில் கைது செய்யப்படாமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி ரோஷன் அமரசிங்க ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகம் சென்ற போது குறித்த செயலாளர் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் 10 ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சில் முகவரியைப் பெற்றுக் கொண்டு குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

எனினும் பொலிஸ் மா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு குறித்த செயலாளரை ஜனாதிபதி நியமித்து உள்ளதால் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றால் அவரது முகவரியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தொலைபேசி இலக்கங்களையும் இலகுவாக பெற்று கண்டுபிடிக்க முடியும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளால் பொலிஸ்மா அதிபர் சட்டத்தை அவமதித்து உள்ளதாகவும் அதன் மூலம் பொலிஸ் திணைக்களத்திற்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் கவலையான தகவல் ஒன்றை வழங்கி உள்ளதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் உறுப்பினர் ஆதித்திய பட்டபெதிகே பகிரங்க நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய போலீஸ் பரிசோதனை விசாரணை கோவைகளை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு எடுத்துச் சென்றுள்ளதாகவும் குறித்த கோவைகளை நீதிமன்ற விசாரணைகளுக்காக ஒப்படைக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டதாக அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார நீதிமன்றில் நினைவுபடுத்தினார்.

ஆணைக்குழுவிற்கு பகுதி அளவு நீதிமன்ற அதிகாரம் கூட இல்லை..

நீதிமன்ற அழைப்பாணையின் பின்னர் குறித்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவித்து அது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி குறித்த ஆணைக்குழுவினால் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள கடிதம் மூலம் மூன்று பேர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழுவிற்கு ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குட்டி யானைகளை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் கோவைகளை ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்துச் சென்றுள்ளதால் வழக்கு விசாரணை சாட்சிகளுக்கு மாத்திரம் நீதிமன்றத்தில் குறித்த கோவைகளை ஒப்படைக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமை நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்தார் . இதேவேளை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எந்த விதத்திலும் பகுதி அளவு நீதிமன்ற அதிகாரம் கூட கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணையாளர்கள் கடமையை செய்யும் பொறி முறையை கடுமையாக வீழ்ச்சி அடையச் செய்கின்றனர்..

குறித்த ஆணைக்குழுவின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் குறித்த ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த நாட்டில் கடமையை செய்யக்கூடிய பொறிமுறைக்கு கடுமையான செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டை மோசமான நிலைக்கு தள்ளுவதற்கு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமை காணப்படும் போது இதனை சீர் செய்வதற்கு சட்டமா அதிபரின் தலையிட மறுப்பது ஏன் என தலைமை நீதிபதி விக்கும் கலுஆராச்சி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரச சட்டத்தரணி ஜனக்க பண்டார சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தின் உதவியை பெற்று பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவதாக அறிவித்தார்.

பொலீஸ், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு ஆணைக்குழுக்கள் தங்களுடைய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் ஆணைக்குழு உருவாக்க சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும்  ஆனால் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் தெளிவின்றி இருப்பது புலப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும்பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் தாங்கள் கடும் அவதானத்தை செலுத்தி வருவதாக தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு எதிர்காலத்தில் தீர்மானம் ஒன்றை அறிவிப்பதாக பகிரங்க நீதிமன்றில் தெரிவித்தனர்.

ஆணைக்குழுவிற்கு எதிராக மனு.. 

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களின் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரங்களின் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அல்லது விசாரணை ஆணைக்குழுவின் காலத்திற்குள் தொடங்கப்பட வேண்டிய 'விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்' போன்றவற்றை நிறுத்த, இடையூறு செய்ய அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உத்தரவுகளை பிறப்பிக்க குறித்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். 

2020 ஜனவரி 22ஆம் திகதி 2159/116 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம் அடிப்படை சட்ட ஏற்பாடுகளுக்கு மாறாக ஆணைக்குழு செய்யப்படுவதுடன் இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பல வருடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகள் தொடர்ந்தும் தாமதமாகக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிஸ்சு பூசா..

இதேவேளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா தான் விடுத்துள்ள அழைப்பாணைக்கு அமைவாக சட்டமா அதிபர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகாமல் இருந்தால் 'நல்ல பாடம்' புகட்டப்படும் என கூறியுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி தலைமையில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

"நான் ஜனாதிபதியிடம் கூறுவேன் சட்டமா அதிபர் திணைக்கள கட்டிடத் திறப்பு விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று. தப்புலவிற்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது" என பிஸ்சு பூசா எச்சரிக்கை தோணியில் மிரட்டி உள்ளார்.

---------------------------
by     (2020-03-11 20:36:19)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links