~

"தற்போது நான்தான் ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்"- திரை மறைவில் இடம்பெற்ற மஹிந்த -கோட்டா அதிகார மோதல் பகிரங்க மேடைக்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 11 பிற்பகல் 08.55) இதுவரை காலமும் திரைக்குப் பின்னால் இடம்பெற்ற மஹிந்த - கோட்டாபய அதிகார மோதல் இன்று பகிரங்கமாக மேடையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. "தற்போது நான் தான் ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பகிரங்கமாக தெரிவித்ததால் திரைக்குப் பின்னால் நடந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் முப்படை தளபதிகள், போலீஸ் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வா கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மட்டக்களப்பு ஹிஸ்புல்லா பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் குழுவினரை கந்தகாட்டில் உள்ள இராணுவ நலத்திட்ட முகாமிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்இதற்கு பதிலளித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்து கரோனா வைரஸ் பரிசோதனைக்கு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை கொண்டு செல்வதே நிறுத்துமாறு கூறியதாக தெரிவித்தார் இதன்போது கோபமடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

"பிரதமர் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். ஆனால் இன்று நான் தான் ஜனாதிபதி. கரோனா பரிசோதனைக்கு நபர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லுமாறு நானே உத்தரவிட்டேன். என்னுடைய உத்தரவை மாற்றி அமைக்க யாருக்கும் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது அனைவரும் ஜனாதிபதியின் முகத்தை புதுமையாக பார்த்த நிலையில் உடனே குறுக்கிட்ட ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இராணுவ தளபதியை பார்த்து "எப்படியும் தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக நாம் கூறியிருந்தோம். அதனை ஜனாதிபதி இப்போது நிறைவேற்றி விட்டதாக இந்த சம்பவத்தின் மூலம் மக்களிடம் எடுத்துக் கூறலாம்" என்று தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரசியல் வதந்தியாக இருந்த மஹிந்த - கோட்டா அதிகார மோதல் இன்றைய சம்பவத்தின் பின்னர் பகிரங்கமாக முதல் தடவை அம்பலத்திற்கு வந்துள்ளது.

---------------------------
by     (2020-03-11 20:49:32)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links