(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 13 பிற்பகல் 10.30) வேலைகளை குழப்பும் வீரர் அரசாங்கத்திற்கு சீனாவுடன் காணப்படும் நெருக்கம் காரணமாக கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் இருந்து இலங்கைக்க வரும் சீன பிரஜைகளை இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள எந்த ஒரு குண நல முகாமிற்கும் அனுப்பி வைக்காது அதற்கு மாறாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பிரஜைகளை மாத்திரம் 14 நாட்கள் குண நல முகாம் வேலைத் திட்டத்திற்கு உட்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதன்படி கடந்த 3 நாட்களில் குண நல முகாமிற்கு அனுப்பப்படாமல் சுமார் 240 சீன பிரஜைகள் இலங்கைக்குள் நுழைந்து உள்ளதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் விஜித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வந்துள்ள தகவல்படி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 11ஆம் திகதி வரை சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த சீன பிரஜைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 741 என தெரிய வந்துள்ளது. இவர்களில் எந்த ஒரு சீன பிரஜையும் குண நல முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அத்துடன் சீன பிரஜைகள் இலங்கைக்கு வரும்போது வழங்கிய தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கைக்கு வரும் சீன பிரஜைகள் இலங்கையில் அவர்கள் தங்கியிருப்பதாக அறிவித்துள்ள முகவரிகளும் தவறானவை என தெரியவந்துள்ளது.
இதன் மூலம் தெரியவருவது வேலைகளை குழப்பும் வீரர் நந்தசேனவின் அரசாங்கத்தின் கொள்கை 'சீனர்கள் தருவார்கள் என்றால் கொரோனாவாக இருந்தாலும் தலை குனிந்து வாங்குகிறோம்' என்ற தேசத்துரோக மக்கள் துரோக நிலைப்பாடாகும்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவென தேசியக் கொடிகளை கையில் ஏந்திக் கொண்டு இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்று இலங்கைக்கு வந்த இலங்கை பிரஜைகள் கோட்டாபய ராஜபக்சவின் இராணுவ மயப்படுத்தப்பட்ட குண நல வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 'நாங்கள் சொல்வது போல் இருக்க முடியாவிட்டால் இருந்த நாட்டுக்கே திரும்பிச் செல்லவும்' என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர் பதிவாகியுள்ளதுடன் அவர் 44 வயதுடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் கொழும்பு தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருடன் பணியாற்றிய மற்றும் ஒரு நபரும் வைரஸ் தொற்று காரணமாக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி இதுவரையில் இரண்டு இலங்கையர்கள் கொரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தின் முழுமையான கருத்துக்கள் அடங்கிய காணொளி கீழே
---------------------------
by (2020-03-14 10:37:45)
Leave a Reply