~

கொரோனாவிலிருந்து பாதுகாக்கத்தான் வேண்டும்; ஆனால் பைத்தியம் ஆடக்கூடாது இது உண்மை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 13 பிற்பகல் 10.30) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அதேவேளை அனாவசியமாக செயற்படுகின்றமை முட்டாள்தனம் என கீழ் காணும் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இது கொரோனா வைரஸினால் அதிகளவான நோயாளர்கள் உயிரிழந்த சீனாவின் வைரஸ் கொல்லி மத்திய நிலையத்தின் தரவுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குவது மிகவும் குறைவு என்பதுடன் அதனால் உயிரிழப்புகளும் வாய்ப்பு குறைவே.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 10 தொடக்கம் 39 வயதுடைய நோயாளர்களில் 0.2% வீதமானவர்களே உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 40 தொடக்கம் 49 வரையிலான வயதுகளை கொண்ட நோயாளர்களில்  0.4% வீதமானவர்களே உயிரிழந்துள்ளனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 50 தொடக்கம் 59 வயதுடை நோயாளர்களில் 1.3% சதவீதமானவர்களே உயிரிழந்துள்ளனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 தொடக்கம் 69 வயதுடைய நோயாளர்களில் 3.6% சதவீதமான நோயாளர்களே உயிரிழந்துள்ளனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 70 தொடக்கம் 79 வயதுடைய நோயாளர்களில் 8 சதவீதமானோர் உயிரிழந்துள்ளனர். ஏனையோரும் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 14 சதவீதமாவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் வயது கூடியவர்களே கொரோனா வைரஸ் காரணமாக அதிகளவில் உயிரிழந்துள்ளமை என்பது புலனாகிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் காரணமாக மாத்திரமன்றி உடல் நலக் குறைவாலும் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஆண் நோயாளர்களில் 2.8% வீதமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டபெண் நோயாளர்களில் 1.7% வீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் குணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 35.7% சதவீதமானவர்கள் வைரஸ் தொற்று காரணமாக மாத்திரமன்றி அதற்கு முன்னர் பல நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்பது விசேட அம்சமாகும். அதில் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 10% சதவீதம் அடங்குவர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7.3% சதவீதமானவர்கள் அடங்குவர். சுவாச நோயினால் பாதிக்கப்பட்ட 6.3% சதவீதமானவர்கள் அடங்குவர். உயர் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 6% சதவீதமானவர்கள் அடங்குவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 சதவீதமானவர்கள் அடங்குவர். 

மேற்கூறிய ஆவண தகவல்கள் மற்றும் ஏனைய நாடுகளில் பதிவாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கக் கூடிய நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. உதாரணமாக பிரித்தானியாவில் 12ஆம் திகதி வரையில் கொரோனா வைரசினால் 596 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அந்த பத்து பேருக்கும் வேறு நோய்கள் இருந்ததுடன் அவர்கள் 80 வயதுக்கும் மேலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் கொரோனா வைரஸினால் அனேகமானோர் குணமடைந்துள்ளனர். இது தொற்று நோய் என்பதால் குணமடைந்த பின்னர் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. அதனால் இது தொடர்பில் அனாவசிய அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை.

அதனால் 'நீங்களும் நானும் சிரித்துக் கொண்டு கடத்துவது வாழ்க்கையின் இறுதி நாட்கள்' போன்ற முட்டாள் தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி பைத்தியம் விளையாடாமல் நோய் தொற்றாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் செய்து புத்தி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வாகன விபத்துக்களால் இதைவிட அதிகமானோர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

---------------------------
by     (2020-03-14 10:41:12)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links