(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 14 பிற்பகல் 06.30) சுவீடன் நாட்டிற்கு சென்றிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தகவலை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் மறைந்துள்ளது. இதனால் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள் சிலருக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நோயாளி ஒருவரின் பெயரை வெளியிடுவது ஊடக ஒழுக்கத்திற்கு மாறானது என்பதால் பாதிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரியின் பெயரை நாம் வெளியிடவில்லை. ஆனால் குறித்த அதிகாரி தற்போது இரகசியமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அரசாங்கம் நன்கு அறிந்துள்ள போதும் இது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் குறித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிக்கு ஸ்வீடன் நாட்டில் வைத்து கொரோனா ஏற்பட்டதாகவும் அது குறித்து அறியாத அவர் நாடு திரும்பியவுடன் வெளிவிவகார அமைச்சில் பல அதிகாரிகளுடன் கூட்டங்களில் பங்கேற்று தொடர்புகளை பேணி வந்துள்ளார். பின்னர் சுகயீனம் அடைந்திருந்த குறித்த அதிகாரியிடம் சோதனை நடத்தியபோது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் ரகசியமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக குறித்த அதிகாரி வெளிவிவகார அமைச்சில் சம்பாஷனைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பலர் உள்ளதுடன் அதில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் உள்ளடங்குகிறார்.
வயது போனவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் 71 வயதுடைய அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இந்த வைரஸ் தொற்று காணப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அது பரவி இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. தினேஷ் குணவர்த்தனவிற்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவாரா? அப்படி இல்லாவிடில் இலங்கை அரசியல்வாதிகளுக்கு பழக்கப்பட்ட சிங்கப்பூர் எலிசபெத் வைத்தியசாலைக்கு செல்வாரா? அப்படியே அவர் செல்ல முயற்சித்தாலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவரை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளுமா? போன்ற சிக்கலான கேள்விகள் உள்ளன.
இதேவேளை இன்றைய தினம் மேலும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட இருவர் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
---------------------------
by (2020-03-15 13:37:15)
Leave a Reply