(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 15 பிற்பகல் 06.45) சுவீடனில் இருந்து வந்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதுடன் அதனை பொது மக்களுக்கு அறிவிக்காமல் அரசாங்கம் மறைந்துள்ளது எனவும் அமைச்சில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகம் உள்ளதெனவும் லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்திக்கு வெளிவிவகார அமைச்சு பதில் அறிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாம் வெளியிட்ட செய்தி உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்பில் எதனையும் கூறவில்லை. வெளிவிவகார அமைச்சின் முழுமையான அறிக்கை கீழே.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளரின் கருத்து
வெளிநாட்டு உறவுகள் அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்தவுடன், தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்ற அமைச்சு, வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (13.03.2020)
ஆரம்பக் கட்டமாக, இந்த வார ஆரம்பத்தின் ஒரு பணி நாளில், கொழும்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட ஊழியர்களும், 2 வாரங்களுக்கு முன்பு அந்த அதிகாரி பணிபுரிந்த ஐரோப்பியத் தலைநகரில் உள்ள ஏனையவர்களும் 'சுய தனிமைப்படுத்தலை' மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமைச்சின் சம்பந்தப்பட்ட பகுதிகளை கிருமி நீக்கம் செய்வதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனது ஊழியர்கள் மற்றும் வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து, மதிப்பீடு செய்யும்.
கொழும்பு
---------------------------
by (2020-03-15 23:39:51)
Leave a Reply