(லங்கா ஈ நியூஸ் - 2020 மார்ச் 16 பிற்பகல் 08.10) இராணுவ அதிகாரிகள் இருவர் மற்றும் இராணுவ சிப்பாய்கள் ஆறு பேர் அடங்களாக எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கந்தக்காடு நல முகாம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் என்பவற்றில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான உண்மை தகவலை இராணுவமும் அரசாங்கமும் பொது மக்களுக்கு மறைத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏனைய நாடுகள் இராணுவத்தை அழைக்கவில்லை. நிலைமை கட்டுங்கடங்காமல் போனால் மாத்திரமே இராணுவத்தை அழைக்க உள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இலங்கையில் நோயாளர்களுடன் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சுயாதீன தொண்டர்கள் பலரும் இலங்கை செஞ்சிலுவை சங்கம், சௌக்கியதான அமைப்பு, சென்.ஜோன் அம்பியூலன்ஸ் சேவை உள்ளிட்ட தொண்டர் நிறுவனங்களும் உள்ளன. இவர்களை பயன்படுத்தி நோயாளர்களை கையாள தெரியாத வேலைகளை குழப்பும் வீரர் நந்தசேன முதலிலேயே இராணுவத்தினரை பயன்படுத்தியுள்ளார்.
---------------------------
by (2020-03-17 08:32:30)
Leave a Reply