(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 17 பிற்பகல் 04.45) உடன் அமுலுக்கு வரும் வகையில் 17ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று தொடக்கம் சுமார் இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு பயணிக்க ஆயத்தமாக இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தம்பதிவ யாத்திரைக்குச் சென்று இந்தியாவில் தங்கியுள்ள 891 இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர விசேட இரண்டு விமானங்களை பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவை அடுத்து லண்டனில் இருந்து யு எல் 504 என்ற விசேட விமானத்தின் மூலம் இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் மகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் விசேட பிரமுகர்களின் பிள்ளைகள் மற்றும் காதலர்கள் 17 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுள் மஹிந்த அமரவீரவின் மகன், வசந்த பெரேராவின் மகன் போன்றோர் உள்ளடங்குவர்.
இந்த விஐபிக்களின் பிள்ளைகள் இலங்கைக்கு வந்ததன் பின்னர் நல முகாமிற்காக இராணுவ ஹெலிகொப்டர் மூலம் தியத்தலாவையில் உள்ள குளிரூட்டப்பட்ட இராணுவ விடுமுறை விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இரண்டும் மொன்டெரோ வாகனங்களையும் அனுப்பி உள்ளது.
விஐபிக்களின் பிள்ளைகள் விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் விடயம் சமூக வலைத்தளங்களில் செய்தியாக வெளி வந்ததால் இவர்களை கண்டதும் பொதுமக்கள் அமைதியின்மை ஏற்படும் என்ற காரணத்தால் இவர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் 40 பேர் அனுப்பப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வந்துள்ள உள்ளக தகவல் படி முன்னாள் அமைச்சர் ஒருவரின் சகோதரர் நாலக்க கஜதீரவின் (மறைந்த முன்னாள் அமைச்சர் கஜதீரவிற்கு தொடர்பு இல்லை) மகளும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய பின் பராமரிப்பு நல முகாமிற்கு செல்லாமல் பத்தரமுல்லையில் உள்ள நாலக்கவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மஹிந்த ராஜபக்சவின் சகோதர உறவுடைய மகன் ஒருவர் இத்தாலியிலிருந்து வருகை தந்து பராமரிப்பு நல முகாமிற்கு செல்லாமல் வீடு சென்றுள்ளார்.
இதேவேளை திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என நேற்று இரவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
---------------------------
by (2020-03-18 15:59:31)
Leave a Reply