(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 21 பிற்பகல் 07.45) கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பழக்கப்பட்டது போல வழமை போன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் நான்கு சிறைக் கைதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்குக் காரணம் இன்று காலை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட சிறைக் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ஏற்பட்ட குழப்பமாகும். குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைக் கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி எதிர்ப்பை வெளியிட்டதுடன் சிறைச்சாலைக்குள் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் உடன் வரவழைக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறைக் கைதிகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலைக்குள் வரவழைக்கப்பட்டனர். சிறைக்கைதிகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது 4 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான சிறைக் கைதி ஒருவரும் அனுராதபுரம் சிறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டாரா என்பது தெரியவரவில்லை.
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை சம்பவத்தின் போது கோட்டே ரஜமகா விகாரையில் இருந்த சபுமல் குமார மன்னரின் வாளை ராஜபக்ஸாக்களுக்காக கொள்ளையிட சென்று பௌத்த பிக்குகள் இருவரை கொலை செய்த நபர் பின்னர் அழைக்கப்பட்டு கொல்லப்பட்டார். சாட்சியை மறைப்பதற்காகவே அவர் கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
ஈரான் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக தமது நாட்டு சிறைச்சாலைகளில் உள்ள 85,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.
இதேவேளை தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கு 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-03-21 18:34:58)
Leave a Reply