~

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதலாவது இலங்கை கொரோனா தொற்று நோயாளர் பூரண குணமடைந்து வெளியேறினார்..! குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 23 பிற்பகல் 07.45) கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதலாவது இலங்கையரான கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி இன்று பூரண குணமடைந்து ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய சீன பெண்ணை கட்டியணைத்து ஆறுதல் கூற வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இலங்கையர் ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது அவரை கட்டியணைத்து ஆறுதல் கூற வரவில்லை.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதியே அடையாளம் காணப்பட்டார். இன்று மார்ச் 23 ஆம் திகதியாகிறது. அப்படியானால் சுமார் 13 நாட்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி பூரணமாக குணம் அடைந்துள்ளார்.

கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை 14 நாட்கள் பராமரிப்பு நல முகாமில் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கூறுவது இதன் காரணமாகவே.

இலங்கைக்கு பழக்கப்பட்ட வகையில் 'அம்மை நோய்' ஏற்பட்ட பின்னர் இலங்கையர்கள் கடைபிடிக்கும் கலாசார பாதுகாப்பு திட்டங்களை தற்போது கடைபிடிக்குமாறு தெரிந்த மொழியில் இலங்கையர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். காரணம் அம்மை நோய் ஏற்பட்ட பின்னர் அது மற்றவருக்கு தொற்றாமல் இருக்க அம்மை நோய் ஏற்பட்டவர் தனிமை படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'வேர்ல்ட்ஓமீட்டர்' கொரோனா வைரஸ் தகவல் அடங்கிய இணையதளத்தின் தரவுகளுக்கு அமைய இலங்கையில் தற்போது வரைக்கும் 92 கொரோனா வைரஸ் தோற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 89 ஆகும். இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். பூரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக காணப்படுகிறது. கொரோனா வைரஸினால் இலங்கையில் இதுவரை மரணங்கள் பதிவாகவில்லை. இலங்கையின் மொத்த சனத் தொகையை வைத்து பார்க்கும் போது ஒரு மில்லியன் மக்களில் நான்கு பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்கள்..

1. மத்தேகொட 
2. கொழும்பு 08
3.கொழும்பு 08
4.மஹர
5.உடுபத்தவ
6.துன்கன்னாவ
7.கொழும்பு 08
8.கல்கிஸ்ஸ
9.கொழும்பு 08
10.காலி
11.அக்குரகொட
12.ராஜகிரிய
13.பௌத்தாலோக்க மாவத்த
14.கொழும்பு 06
15.கந்தகாடு நல முகாம்
16.கந்தகாடு நல முகாம்
17.கந்தகாடு நல முகாம்
18.கந்தகாடு நல முகாம்
19.மட்டக்களப்பு நல முகாம்
20.கந்தகாடு நல முகாம்
21.கந்தகாடு நல முகாம்
22.கந்தகாடு நல முகாம்
23.கந்தகாடு நல முகாம்
24.கந்தகாடு நல முகாம்
25.கல்கிஸ்ஸ நல முகாம்
26.கந்தகாடு நல முகாம்
27.கந்தகாடு நல முகாம்
28.கந்தகாடு நல முகாம்
29.மாரவில
30.இரத்தினபுரி
31.மட்டக்களப்பு நல முகாம்
32.கந்தகாடு நல முகாம்
33.வவுனியா நல முகாம்
34.உடுகம்பொல
35.களனி
36.வத்தளை
37.நெலும்தெனிய
38.களுத்துறை தெற்கு
39.கொழும்பு 08
40.கந்தகாடு நல முகாம்
41.மட்டக்களப்பு 
42.வாய்க்கால்
43.வாய்க்கால்
44.மொரவக்க
45.கந்தகாடு நல முகாம்
46.பண்டாரகம
47.பேருவளை
48.மாலபே
49.தெஹிவளை-கல்கிஸ்ஸ
50.ரத்மலான
51.வத்தளை
52.ஜா-எல
53.ரத்மலான
54.இரத்தினபுரி
55.இரத்தினபுரி
56.வாய்க்கால்
57.ஜா-எல
58.ஜா-எல
59.பண்டாரவளை
60.கந்தகாடு நல முகாம் 
61.கந்தகாடு நல முகாம்
62.வாய்க்கால்
63.ஜா-எல
64.ஜா-எல
65.கொழும்பு 08
66.கந்தகாடு நல முகாம்
67.கந்தகாடு நல முகாம்
68.கந்தகாடு நல முகாம்
69.நிவாசபுர
70.பாணந்துறை
71.கொழும்பு 08
72.வெல்லவாய
73.கந்தகாடு நல முகாம்
74.கந்தகாடு நல முகாம்
75.வவுனியா நல முகாம்
76.மட்டக்களப்பு நல முகாம்
77.கந்தகாடு நல முகாம்
78.உடுவில்
79.சேதவத்தை
80.கந்தகாடு நல முகாம்
81.நுகேகொட
82.மக்கொன
83.களுத்துறை
84.மெகோனா
85.அருக்கொட
86.கிம்புடான

---------------------------
by     (2020-03-23 17:38:06)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links