(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 13 பிற்பகல் 10.00) நிவாரணம் வழங்குதல் ராஜபக்சக்களின் உத்தியோகபற்று இல்லாத பொலிஸ், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அடியாட்களை தவிர எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரிசி நிவாரணம் வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாளைய தினம் விநியோகம் செய்யும் நோக்கில் எம்பிலிபிட்டிய பகுதியில் இருந்து அரிசி ஏற்றி வந்த லொறிக்கு ஊரடங்குச் சட்டத்தின் போது வழங்கப்படும் அனுமதி பத்திரம் இருந்த போதும் குறித்த லொறியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கொண்டு செல்வதை தடுத்து லொறியை திருப்பி அனுப்ப பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். இதற்கு ரஞ்சன் ராமநாயக்க எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதனை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னரும் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு அரிசி மற்றும் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறிகளை பொலிஸார் திருப்பி அனுப்பினர். அந்த லொறிகளுக்கும் சட்ட ரீதியான அனுமதிப் பத்திரம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிவாரணம் பெற்றுக் கொள்ளும் பொது மக்கள் இவ்வாறான கேடுகெட்ட செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும்.
உத்தியோகபூர்வமற்ற பொலிஸ், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அடியாட்கள் விநியோகம் செய்யும் நிவாரணங்களில் தாமரை மொட்டு கட்சியின் சின்னம் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ரஞ்சன் ராமநாயக்க விநியோகம் செய்யும் நிவாரணங்களில் அவ்வாறு கட்சி சின்னங்கள், தேர்தல் சின்னங்கள் எதுவும் இல்லை.
ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யும் போது உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவென முன்வைத்துள்ள ஆலோசனைகளை பொலிஸார் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-04-14 02:45:46)
Leave a Reply