(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 19 பிற்பகல் 08.05) வேலைகளை குழப்பும் வீரரின் உத்தியோகப்பற்றற்ற இராணுவ பொலிஸ் ஆட்சியின் ஊடாக கொரோனா வைரஸுடன் ஓடிப்பிடித்து விளையாட முடியும் என நினைத்துக் கொண்டு நோயாளர்களை பரிசோதனை செய்வதற்கு சாக்குப் போக்குகளை சொல்லி அது தொடர்பான கணக்கீடுகளை திரிபுபடுத்தி நாட்டை ஆபத்தில் தள்ளிவிட்டுக் கொண்டிருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்று இன்று 19 ஆம் திகதி மாலை பதிவாகியுள்ளது. இன்றைய தினம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகம் எண்ணிக்கையை பொது மக்களுக்கு குறைத்து அறிவித்துள்ளனர்.
முதலில் இடம்பெற்ற சம்பவமானது 18 நோயாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தியை கொரோனா தொடர்பில் நாளாந்தம் இடம்பெறும் சுகாதார மற்றும் இராணுவ இணை ஊடக சந்திப்பில் வெளியிட வேண்டாமென மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த ஊடக சந்திப்பில் அவ்வாறான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இவ் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்து கொண்டு தமது ஊடக பிரதானிகளுக்கு அறிவித்த போதும் ஊடக பிரதானிகள் அரசாங்க தரப்பிலிருந்து கூறப்பட்ட பொய் தகவலையே மாலை நேர செய்திகளில் வெளியிட்டனர். அதாவது இன்றைய தினம் கொரோனா வைரஸால் எவரும் பாதிக்கப்படவில்லை என செய்திகளை வெளியிட்டனர். ஆனாலும் உண்மை தகவல் வெளியில் கசிந்ததால் இரவு நேரத்தில் விசேட செய்தி எனக் கூறி இன்றைய தினம் 15 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் பொய் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆனால் அது உண்மையான செய்தி அல்ல.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 15 பேர் இன்றைய தினம் பராமரிப்பு மத்திய நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அது மத்திரமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற 2 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவிசாவளை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு மத்திய நிலையங்களில் உள்ள 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக வெளியில் இருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாம் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நாம் வெளியிட்ட செய்திகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதனால் பொய் கூறுவது அரசாங்கமே.
பாராளுமன்றத் தேர்தலை எப்படியாவது வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் ராஜபக்ச அரசாங்கம் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பரவவில்லை என்பதற்கு காரணங்களை கூற வேண்டி இருப்பதால் பராமரிப்பு மத்திய நிலையங்களில் தங்கியுள்ள நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை மாத்திரம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சாதாரண பொது மக்கள் மத்தியில் வைரஸ் பரவி வருவதை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது.
மெதமுலன ஆட்சியாளர்களின் அதிகார மமதையால் வைரஸுடன் ஓடிப் பிடித்து விளையாடலாம் என முட்டாள் ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். பாதிக்கப்படுவது சாதாரண பொது மக்கள் தானே தங்களால் முன்னோக்கி செல்ல முடியும் என இவர்கள் நினைக்கின்றனர். கொரோனா வைரஸ் பேரழிவு என்பது இலங்கையின் பிரச்சினை மாத்திரமல்ல உலக அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பதையும் இதற்கான தீர்வு பரந்தளவில் காணப்பட வேண்டுமே தவிர மெதமுலன குடும்பத்திற்குள் அல்ல என்பதையும் இந்த முட்டாள்கள் அறியாமல் இருப்பது நாட்டுக்கு துரதிஷ்டமான விடயமாகும்.
---------------------------
by (2020-04-19 16:51:14)
Leave a Reply