(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 20 முற்பகல் 06.40) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை தங்களுடைய இருப்பிடத்திற்கு அழைத்து அவரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளதாக லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு செய்தி வந்துள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா உண்மையை பேசியதால் ராஜபக்ச சகோதரர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். கடந்த 18 ஆம் திகதி இரவு 10 மணிக்கு சிரச தொலைக்காட்சி பிரதான செய்தியில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்த கருத்து மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை தொலைக்காட்சியில் வெளிப்படுத்தியமையே ராஜபக்சக்கள் கோபம் அடைய காரணமாக அமைந்துள்ளது.
சிரச பிரதான செய்தியில் ஊடகவியலாளர் எதிர்வரும் மே 11 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என இராணுவத் தளபதியிடம் வினவிய போது அதற்கு பதில் அளித்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா எதிர்வரும் மே 11 ஆம் திகதி பாடசாலை அல்லது பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார். இதில் மிகவும் பாரதூரமான கருத்து என்னவென்றால் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர்கள் தொடர்புகளை வைத்திருந்த சுமார் 40,000 பேர் வரை இருப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இராணுவ தளபதியால் கூறப்பட்ட கருத்தாகும்.
இராணுவத் தளபதி வெளியிட்ட இந்த இரண்டு கருத்துக்களும் ராஜபக்சக்களின் தேவைக்கு ஏற்ப தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளது. ராஜபக்சக்களின் தற்போதைய தேவை கொரோனா வைரசினால் நாட்டின் நிலைமை மேலும் மோசம் அடைவதற்கு முன்னர் நாடு தற்போது வழமை நிலைக்கு திரும்பி உள்ளது என்பதை காண்பதற்காக இரண்டு மூன்று நாட்களுக்கு போலீஸ் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி எப்படியாவது பொதுத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெருவதாகும். கொரோனா வைரஸை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராஜபக்ச ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ள போதும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு முடியாது என்பதால் அப்போதைய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் தோல்வி உறுதி என்பதை அறிந்து கொண்டு உடனடியாக தேர்தலை நடத்த ராஜபக்ஷக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்சக்களின் இலக்கு அதுவாக இருந்தாலும் சவேந்திர சில்வாவின் இலக்கு அதுவல்ல. நாட்டினுடைய உண்மையான நிலைமை குறித்த தகவல்கள் சவேந்திர சில்வாவிற்கு கிடைக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பதற்கு தற்போது மேஜர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலமாக நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலைமை இராணுவத் தளபதிக்கு தெரியவந்துவிடும். அதற்கு மேலதிகமாக இராணுவ புலனாய்வு பிரிவினரின் மூலமாகவும் நாட்டின் உண்மையான தகவல் நாளாந்தம் இராணுவ தளபதிக்கு தெரியவரும். அதனால் நாட்டினுடைய உண்மையான நிலைமைகளை மூடி மறைக்க இராணுவத் தளபதிக்கு முடியாது. எனவே சவேந்திர சில்வாவின் வாயால் வெளிப்படுத்தப்பட்ட இந்த கருத்து மூடி மறைக்க முடியாத உண்மையாகும். எனினும் ராஜபக்ஷக்களுக்கு இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதன்படி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை தங்களது இருப்பிடத்திற்கு அழைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
சிரச தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கியமை மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனாவசிய கருத்துக்களை முன்வைத்தமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை திட்டியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மத்தியில் "என்ன நீயும் பொன்சேகா போன்று இருக்க நினைக்கிறாயா?" என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய வார்த்தை சவேந்திர சில்வாவின் மனதை கஷ்டப்படுத்தி உள்ளது.
காரணம் இராணுவத் தளபதியை 'நீ' என்று அழைத்தமை மற்றும் 'பொன்சேகா போன்று இருக்க நினைக்கிறாயா' என்று கூறியமையாகும். (யுத்த வெற்றியின் பின்னர் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமக்கு எதிராக சதி செய்வதாக நினைத்து மஹிந்த மற்றும் கோட்ட ஆகியோர் அவரை ஒதுக்கி வைத்தனர். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றபோதும் பொன்சேகா ராஜபக்சக்கள் தொடர்பில் மன உளைச்சல் அடைய அது காரணமாக அமைந்தது.)
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போது பழகி வரும் தன்னுடைய 'விஐபி காதலியை' சந்தித்து தனது மன கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"ராஜபக்ஷக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் பயன் இல்லை. நான் நினைக்கின்றேன் பொன்சேகா பெரியவருக்கும் இதுதான் நடந்திருக்கும்" என்று இராணுவத் தளபதி தனது காதலியிடம் கூறியுள்ளார்.
இதேவேளை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாவிட்டால் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். தற்போதும் அவர் சேவை நீடிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-04-20 15:34:42)
Leave a Reply