சிறந்த இராணுவ ஆட்சியை விட மோசமான பாராளுமன்றம் நல்லது
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 21 முற்பகல் 05.30) மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 2020 பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 19ஆம் திகதி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட போது ஏப்ரல் மாதம் 25 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய (மஹிந்த ராஜபக்ஷ அல்ல) பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மே மாதமா, ஜூன் மாதமா அல்லது ஜூலை மாதமா என்பதை கொரோனாவால் மாத்திரமே கூற முடியும் எனவும் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை விடுத்த மார்ச் 19ஆம் திகதி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த அறிவிப்பு வெளிவந்து ஒன்பது நாட்களின் பின்னர் அதாவது மார்ச் 28ம் திகதியே முதலாவது கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் ஜூன் 20ஆம் திகதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இந்த வைரஸ் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 20ஆம் திகதியே நாட்டில் அதிகளவான 33 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் என்பது விஷேட அம்சமாகும்.
- கொரோனா நோய் தோற்றவர்கள் 60 பேர் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கூட உயிர் இழக்காமல் இருந்தபோது மறு திகதி அறிவிக்காமல் தேர்தலை ஒத்தி வைத்து 'தேர்தல் தினத்தை சரியாக கொரோனா வைரஸால்தான் கூற முடியும்' என்று அறிவித்த மஹிந்த தேசப்பிரியவிற்கு நோய்த் தொற்றாளர்கள் 304 பேராக அதிகரித்த பின்னர் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என கூறியது கொரோனா வைரஸா?
- அப்படி இல்லாவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினமான ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச இன்று காலை தொலைபேசி அழைப்பெடுத்து கூறினாரா?
- அப்படியும் இல்லாவிட்டால் பசில் ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்கும் வகையில் 'கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள் பெரியவரின் பிறந்த நாளுக்கு நாள் சிறந்த பரிசு ஒன்றை தயார் செய்கிறேன்' என்று மஹிந்த தேசப்பிரிய பசில் ராஜபக்சவுக்கு நினைவுபடுத்தினாரா?
- மார்ச் 19ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தேர்தல் நடத்தப்படும் விதம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அறிவிப்பதாக கூறிய மஹிந்த தேசப்பிரியவிற்கு ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என கூறிய சுகாதார அதிகாரி யார்? அவரது பதவி நிலை மற்றும் பெயரை வெளிப்படுத்த முடியுமா?
- பேச்சுவார்த்தை இடம்பெற்றது எங்கு? எப்போது? இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்ட விடயங்கள் என்ன? ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என மஹிந்த தேசப்பிரியவின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு குறித்த சுகாதார அதிகாரிகள் கொடுத்த பரிந்துரை அறிக்கை உள்ளதா? இருக்குமானால் எங்கே?
- அப்படி இல்லையென்றால் தேர்தல் நடத்தப்படும் தினத்தை திகதி அறிவிப்பின்றி பிற்போட்ட தீர்மானம் பிழை என்று பின்னர் தெரிந்ததால் மற்றும் அரசியலமைப்பின் 33 (1) (ஏ) சரத்தின் படி 'தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மற்றும் உறுதி செய்வதற்கு' என்ற ஜனாதிபதியின் தலையீட்டை செயற்பாடுத்த ஏதோ ஒரு திகதியை பெயரிட்ட போதிலும் அன்றைய நாள் கொரோனா வைரசுக்கு மருந்து தேடி வைரஸை ஒழித்து தேர்தலுக்கு பொருத்தமான நாட்டை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவரது பிறந்த தினமே பொருத்தமானது என ஏதேனும் ஒரு ஜோதிடர் கூறினாரா?
பொதுமக்களுக்கு இவை பிரச்சனைக்குரிய விடயங்களாகவே உள்ளது. இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பொறுப்பாகும். இந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அல்லாமல் தனிப்பட்ட மஹிந்த தேசப்பிரியவிடம் நாங்கள் ஒப்படைப்பது அவர் தொடர்பில் கொண்டுள்ள அவநம்பிக்கையினால் ஆகும். காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதி மணித்தியாலங்களில் அவர் செய்த மோசமான செயலினால் ஆகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் இறுதி நாளில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை தடை செய்தது இந்த மஹிந்த தேசப்பிரிய என்ற சந்தர்ப்பவாத, தனக்கு லாபம் கிடைக்கும் பக்கத்தை நோக்கி வாய் அசைக்கும், தனக்கு லாபம் கிடைக்கும் பக்கத்தை நோக்கி தலை ஆட்டும், வேஷம் போட்டு உண்மையான முகத்தை மறைக்கும், எவ்வித கொள்கையும் இல்லாத அரச அதிகாரியி என்பது குறிப்பிடத்தக்கது. லங்கா ஈ நியூஸ் இணையத்தை மீண்டும் தடை செய்யுமாறு ஜனாதிபதி தேர்தல் தினமான 2019 நவம்பர் 16ஆம் திகதி தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியது மஹிந்த தேசப்பிரியவே. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்சக்கள் சார்பாக செயல்படுவதாக சில ஊடகங்கள் தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட போது 'அவை தனியார் ஊடகங்கள் என்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறிய மஹிந்த தேசப்பிரியவிற்கு லங்கா ஈ நியூஸ் தனியார் ஊடகமாக தெரியவில்லை என்பது புதுமையான விடயமாகும்.
எது எப்படி இருப்பினும் நாம் அனைத்தையும் இழந்த போதும் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு லங்கா ஈ நியூஸ், மோசமான சிறந்த இராணுவக் குழு ஆட்சியை விட மோசமான பாராளுமன்றத்தை விரும்பி' இருப்பதால் தொற்று மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் 'எப்படியாவது' பொதுத்தேர்தலை அல்ல 'நியாயமான' பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு அனைத்து உபாய முறைகள் மற்றும் புதிய முறைகள் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இயலுமை ஆகவேண்டுமென நினைப்போம்.
---------------------------
by (2020-04-21 10:42:58)
Leave a Reply