(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 07.30) வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பில் லங்கா ஈ நியூஸ் நேற்று வெளியிட்ட செய்தியை உண்மைப்படுத்தும் வகையில் மேலும் 30 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று அறிவித்துள்ளார். அதன்படி வெலிசர கடற்படை முகாமில் மொத்தமாக 60 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வெலிசர கடற்படை முகாமில் 60 கடற்படைச் சிப்பாய்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 30 பேருக்கு மாத்திரமே வைரஸ் இருப்பதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் இன்றைய தினம் மேலும் 30 பேருக்கு கொரோனா நோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பராமரிப்பு முகாம்களில் இருந்து 11 கொரோனா தோற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்றைய தினம் இதுவரையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாம் தற்போது தனிமைப்படுத்த பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கடற்படை வீரர்கள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் மற்றும் விடுமுறையில் சென்று தங்களது ஊர்களில் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து தனிமைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களை பராமரிப்பதற்கென இலங்கை கடற்படை தனியான பராமரிப்பு மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி இருந்த போதும் நோய் தொற்று காரணமாக இராணுவ முகாமை முழுமையாக இழுத்து மூடி உள்ளமை ஆபத்தான விடயமாகும். உலகில் இதுவரை எந்த நாடுகளிலும் இவ்வாறு நடந்ததில்லை.
---------------------------
by (2020-04-24 15:09:27)
Leave a Reply