~

கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளானமைக்கு கடற்படை தளபதியே பொறுப்புக் கூற வேண்டும்..! திகம்பத்தன பகுதியில் ஏற்பட்ட அழிவுக்கும் இவரே பொறுப்பு..!

தொற்றுநோய் காரணமாக இராணுவ முகாமை இழுத்து மூடிய ஒரே நாடு

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 8.20) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை கடற்படை முகாமில் 60 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் வெலிசர கடற்படை முகாமில் சுமார் 4000 கடற்படை வீரர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இராணுவ முகாம் ஒன்றை இழுத்து மூடிய நாடாக வேலை (குழப்பும்) செய்யும் வீரரின் ஆட்சியின் கீழுள்ள நாடு பதிவாகி உள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு மத்திய நிலையத்தை பயன்படுத்திக் கொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மாத்திரம் இராணுவத்தினரை பயன்படுத்துவதை விடுத்து தொற்று நோய் குறித்த எவ்வித அடிப்படை அறிவும் அற்ற இராணுவ வீரர்களை முதல் வரிசையில் அனுப்பி செயற்படுவதால் இராணுவத்தினருக்கு ஆபத்து ஏற்படக் கூடுமென லங்கா ஈ நியூஸ் முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இப்போது அந்த ஆபத்து நடந்து முடிந்து விட்டது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென நாம் பிரார்த்திக்கும் அதேவேளை எத்தனை பேர் பலியாவார்கள் என்று யார் அறிவார்?. 

அமெரிக்காவின் யுத்த கப்பலில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்கள் தொடர்பில் கதைத்த கடற்படைக் கெப்டன் ஒருவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடற்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டு வீட்டுக்கு போவதாக உலகம் முழுவதும் பிரபலமடைந்து அவர் வீடு நோக்கி சென்றார். தனது சீருடை மற்றும் பதவியை வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு குடை பிடிக்காமல் சக கடற்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு சென்றதால் அவர் உண்மையான தலைவர் ஆனார். 

இந்தியாவுடன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் இந்தியாவின் இராணுவ யுத்த கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்திற்கு முன்னறிவித்தல் இன்றி நுழைந்தது. அப்போது கடற்படையின் கிழக்கு கட்டளையிடும் தளபதியாக செயல்பட்ட கேப்டன் வீரசேகர உடனடியாக குறித்த கப்பலை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இவ்விடயம் ஜே.ஆர் ஜெயவர்தனவிற்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னர் முதுகெலும்புடன் செயல்பட்ட குறித்த கடற்படை அதிகாரி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இவ்வாறு அதிகாரமிக்க அதிகாரிகள் இருந்த இலங்கை கடற்படையில் தற்போது பிரதேச சபை உறுப்பினர்களுக்கு இரண்டு மூன்றாக வளைந்து கொடுத்து செயல்படும் ஒருவர் பிரதானியாக உள்ளார். 

கடற்படை கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவிட்டு கடற்படை வீரர்களை பயிற்சிக்கு உட்படுத்துவது கடல் பகுதியில் யுத்தம் செய்து நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதற்காகவாகும். அவர்கள் உடனடியாக நிலப்பகுதி யுத்தத்திற்காக அனுப்பப்பட்டால் என்ன நடக்கும் என்பதை முட்டாளுக்கு கூட அறிய முடியும். 

தற்போது முதலாம் இரண்டாம் தொடர்புகளிடம் மாத்திரமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது..

இவ்வாறான சூழ்நிலையில் தனது அடுத்த பதவி காலத்திற்கு நீடிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடற்படை தளபதி கடற்படை வீரர்களை நிலப்பகுதி சேவையில் ஈடுபடுத்தியுள்ளார். ஒரு தங்குமிடத்தில் 50 தொடக்கம் 60 கடற்படை வீரர்கள் தங்கி இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் என்பதை அறியாமலும் அவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை அறியாமலும் கடற்படை தளபதி செயற்பட்டுள்ளமை வெலிசர கடற்படை முகாம் சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. 

வெலிசர மகாசேன் முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தொடர்புகளை கொண்டுள்ள கடற்படை வீரர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 300 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதுடன் இதில் மூன்றாம் மற்றும் நான்காம் தொடர்புள்ள நபர்களுக்கு சோதனை செய்ய வேண்டுமாயின் கெமுனு முகாமில் சுமார் 3000 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டி வரும். 

திகம்பத்தன அழிவிற்கு வழி செய்த பியல் டி சில்வா...

2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி திகம்பத்தன பகுதியில் கடற்படை வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை இலக்கு வைத்து வெடி பொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப் படை வாகனம் ஒன்று மோதி தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 103 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். கடற்படை மாற்று முகாமிற்குள் பஸ் ஒன்று சென்றதன் பின்னர் முன்வாயில் வழியை மறைக்கும் வகையில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தற்கொலை குண்டுதாரி உள் நுழைவதை தடுப்பதற்காகவாகும். ஆனால் அன்றைய தினம் குறித்த வாகனம் கடற்படை வீரர் ஓருவருக்கு பழங்கள் கொள்வனவு செய்ய தம்புள்ளை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரி அடங்கிய டிரக் வாகனம் கடற்படை முகாமுக்குள் நுழைந்தது இந்த தாக்குதலை நடத்தினர். எந்த ஒரு மோதலில் ஈடுபடாமல் நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் பலியாகினர். அன்றைய தினம் விடுமுறையில் செல்லும் விடுமுறை முடிந்து வரும் கடற்படை வீரர்கள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தாமல் பாதுகாப்பு வாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தை பழங்கள் கொள்வனவு செய்ய தம்புள்ளைக்கு அனுப்பி வைத்தவர் வேறு யாருமல்ல தற்போதைய கடற்படைத் தளபதியான பியல் டி சில்வா ஆவார். இதுவே வேறு ஒரு நாடாக இருந்தால் இவ்வாறு கவனயீனமாக நடந்து கொண்ட கடற்படை அதிகாரி பின்னால் உதைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பாரே தவிர கடற்படைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டு இருக்க மாட்டார். 

மூழ்கிய கப்பல்களை மீட்டு எடுத்து பழைய இரும்புக்கு விற்றவர்..

பாஸ்கட் போல் மாத்திரம் விளையாடி சிரேஷ்ட நிலைக்கு வந்த இவர் தன்னுடைய குழுவில் இருந்த மிகவும் மோசமான செயல் திறனற்ற அதிகாரி ஆவார். ஒவ்வொரு சிரேஷ்ட அதிகாரிகளும் சித்தியடைய வேண்டிய மண்டல பிரதானி கற்கைநெறி மற்றும் நீண்டகால கற்கைநெறி போன்றவற்றில் சித்தி அடையாதவர். ஒரே ஒரு கப்பலுக்கு மாத்திரமே கட்டளை இட்டுள்ளார். தரகர் வேலை செய்யும் இவர் மூழ்கிய கப்பலை மேலே எடுத்து பழைய இரும்புக்கு விற்பனை செய்யும் செயலுக்கு மிகவும் திறமை வாய்ந்தவர். 

கடற்படை வீரர்களை நிலத்திற்கு கடமைக்கு அனுப்பி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த இந்த கடற்படை தளபதி நாட்டு மக்கள் மத்தியில் வந்து பொது மன்னிப்பு கோரி உடனடியாக பதவி விலகி வீடு செல்ல வேண்டும். 

_சுகமான கடற்படை வீரர்-

---------------------------
by     (2020-04-25 15:31:51)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links