(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 07.40) அரசாங்கம் மூடி மறைக்க முற்பட்டாலும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் ராஜபக்ஷக்கள் வசிக்கும் வீரகெட்டிய, மெதமுலன பகுதி கிராமங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன. அந்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
தெற்கில் மெதமுலனவிற்கு மேலதிகமாக வலஸ்முல்ல, ஹத்தரபார போன்ற பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. ஹத்தரபார பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் பதிவாகியுள்ளனர். இவ்வாறு நோய் தொற்று ஏற்பட்ட இருவர் கிராமத்திலும் சுற்றித் திரிந்துள்ளதால் குறித்த பிரதேசம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசமாக மத்திய மாகாணம் விளங்குகிறது. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் ஆங்காங்கே பல நோய் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிந்த பல கிராமங்கள் மூடப்பட்டுள்ளன.
பாத்தஹேவாஹெட்ட பிரதேசம் இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பூலியெத்த, நஹித்தவல, நஹித்தவல வடக்கு, கெட்டவல, தலாத்துஓயா, தம்பவெல வடக்கு, பவுனால, கந்தஅக்குல, கம்மானந்த கிராமங்களும்,
கண்டியில்,
பூஜாபிட்டிய, பொக்காவெல, அம்பெக்க, ஹிருஸ்ஸகல, அம்பிட்டிய, நுகவெல, கம்பளை, கம்பளை - நாவலபிட்டி வீதி சந்தி, அக்குரண, வத்தேகெதர, மடவல (3 நோய் தொற்றாளர்கள் உள்ளனர்), உக்ககும்புர, வல்தெனிய, மொரககந்த, கம்ஹத, சியம்பலாபிட்டிய, புஸ்ஸதெனிய, ஹத்தரலியத்த பிரதேசங்கள் மூடப்பட்டுள்ளன.
தலாதுஓயா பிரதேசத்தில் இருந்து சுமார் 117 பேர் பூனானை பராமரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பலருடன் பழகி இருப்பதால் குறித்த பகுதியை முற்றாக மூடிமாறு பிரதேச பொது சுகாதார வைத்திர அதிகாரி அளித்த பரிந்துரைக்கு அமைய பொலிஸார் குறித்த பிரதேசங்களை முற்றாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி கொரோனா தொற்று மரணம் என அரசாங்கம் கூறும் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கள் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கருத்து வௌியிடுகையில், இவ்வாறான 500ற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஹம்பாந்தோட்டை வலய வைத்திய பணிப்பாளர் சமல் சஞ்சீவ தனது சமூக வலைத்தளம் ஊடாக, நாடு முழுவதும் சந்தேகத்திற்கு இடமான 300ற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். இவ்வாறு மரணமடைந்தவர்கள் கொரோனா மரணம் அடைந்தவர்கள் போன்று பொலித்தீன் உரையில் சுற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ, மத்திய மருந்து களஞ்சியத்திற்கு பொறுப்பாக செயற்படும் வைத்திய பணிப்பாளர் கப்பில விக்ரமநாயக்க தன்னிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தகவல்களை வௌியிடுவதாக அறிவித்துள்ளார்.
எந்தவொரு வைரஸினாலும் பொய்யை அழிக்க முடியாது என்பதை முட்டாள் அரசாங்கம் தெரிவிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் பொய் வேசம் போட்டு இந்த வைரஸை சிறியதாக நினைத்து செயற்படுவதால் புத்தியுள்ள நாட்டு மக்கள் தங்களது உயிரை பலிகொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
---------------------------
by (2020-05-03 18:11:19)
Leave a Reply