(லங்கா ஈ நியூஸ் 2020 மே 03 முற்பகல் 02.00) லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் கடந்த ஏப்ரல் 30ம் திகதி மாலை தொடக்கம் சில விஷமிகளால் தொடர்ச்சியான ஹெக்கர்களின் தாக்குதலால் முடக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தின் பின் எமது முகநூல் வழியாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டன. சாதாரணமாக இணையத்தளம் ஒன்றிற்குள் பிரவேசிக்கும் வாசகர்களை திசை திருப்பி அந்த எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன் ஹெக்கர்கள் தாக்குதல் நடத்துவதுண்டு. அது அவர்களது வழிமுறை. எனினும் ஹெக்கர்களிடம் இருந்து எமது இணையத்தை மீட்டெடுக்க குறைந்த செலவில் குறுகிய காலம் எமக்குச் சென்றது. தற்போது எமது இணையத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். 30ம் திகதியில் இருந்து முடக்கப்பட்ட எமது இணையத்தில் தற்போது வழமைபோன்று செய்தி பிரசுரம் செய்யப்படுகிறது. இணையத்தளம் முடக்கப்பட்டதால் வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.
லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டதன் பின் எம்முடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து விசாரித்து எம்மோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஏகாதிபதிகளின் தேவைகளுக்காக பணத்தை பெற்றுக் கொண்டு செயல்படும் ஹெக்கர்களுக்கு, உயிர் மற்றும் சொத்துச் சேதங்களுடன் சுமார் 15 வருடங்கள் பல இடையூறுகள் இன்னல்களுக்கு மத்தியில் செயற்படும் லங்கா ஈ நியூஸ் இணையத்தை முடக்க முடிந்தாலும் லட்சக்கணக்கான வாசகர்களிடம் இருந்து கிடைக்கும் அந்த உண்மையான ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு, பங்களிப்பு என்பவற்றை ஒருநாளும் முடக்க முடியாது என்பதை பதிவு செய்து வைக்க விரும்புகிறோம்.
வெற்றி..!
---------------------------
by (2020-05-03 19:06:03)
Leave a Reply