(லங்கா ஈ நியூஸ் 2020 மே 04 பிற்பகல் 09.45) அரசாங்கம் மூடி மறைக்க முயற்சித்தாலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட செய்தியை பொய்யென அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் விமர்சித்து வருகின்ற போதிலும் உண்மையை ஒரு நாளும் மறைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தம்புள்ளையில் இராணுவ வீரர் ஒருவர் நடு வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பொது மலசல கூடத்திற்கு அருகில் இராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தம்புள்ளை பஸ் நிலைய பகுதியில் உள்ள பொது மலசல கூடத்திற்கு சென்ற குறித்த இராணுவ வீரர் வெளியில் வந்து பணம் செலுத்துகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அருகில் இருந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த இராணுவ வீரரை தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் இடைநடுவில் அவர் உயிரிழந்தார். கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் கடமை புரியும் கலேவெல பல்லேபொல பிரதேசத்தைச் சேர்ந்த துசார குமார சிங்க என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நான்கு நாட்களுக்குப் பின்னர் தம்புள்ளை பிரதேசத்தில் இன்று 4ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைத்துள்ள தகவல் படி மின்னேரியா இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவரும் இன்று இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மற்றும் ஒருவர் உயிரிழந்ததாக அரசாங்கம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கொரோனா மரணம் தொடர்பில் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறிந்து வைத்திருந்ததன் காரணமாக மரணம் குறித்த செய்தியை வெளியிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. கொழும்பு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரருக்கு நெருங்கிய நபராவார். இவரது இறுதிக் கிரியைகள் கொரோனா மரணம் தொடர்பான சர்வதேச பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள உள்ளக தகவல்கள் படி கடற்படை வீரர்கள் 4 ஆயிரத்து 652 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் 836 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலாதுஓயா பிரதேசத்தில் இருந்து சுமார் 214 பேர் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக புனானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காலை உணவு நண்பகல் 12 மணிக்கே வழங்கப்படுவதாகவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு இருக்கின்ற ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்தார்.
நேற்று மூன்றாம் திகதி அரசாங்கம் தகவல் வெளியிடாமல் மறைத்த போதும் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தகவல் மத்திய நிலையத்திற்கு வந்த தகவல்படி 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் கொழும்பு பிரதேசத்தில் மூவருக்கும் கம்பஹா மாவட்டத்தில் ஐவருக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருவருக்கும் குருவிட்ட பிரதேசத்தில் ஒருவருக்கும் வனாத்தவில்லு பிரதேசத்தில் இருவருக்கும் புத்தளம் பிரதேசத்தில் நால்வருக்கும் வவுனியா பிரதேசத்தில் அறுவருக்கும் மன்னார் பகுதியில் ஒருவருக்கும் உடப்பு பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பின்னர் அந்த நபருடன் நெருங்கி பழகிய 50 தொடக்கம் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கம் பாரிய அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்ட போதும் தற்போது அந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது நோய் அறிகுறிகள் அதிகமாக காணப்படும் நபர்களுக்கு மாத்திரமே பரிசோதனை கொரோனா முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான காரணம் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு கருத்து வெளியிட்ட வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் (MRI) பேச்சாளர் ஒருவர் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைந்துள்ளது என தெரிவித்தார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களில் நூற்றுக்கு 20 வீதமான நபர்களிடம் எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நூற்றுக்கு 60 வீதமானவர்களுக்கு சிறிய நோய் அறிகுறி காணப்படுவதாகவும் அவர் கூறினார். நூற்றுக்கு 20 வீதமான நோயாளர்களுக்கு மாத்திரமே நோய் அறிகுறிகள் கடுமையாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இப்போது அரசாங்கம் அதிக நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்களை மாத்திரமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாக குறித்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உபகரண வசதிகள் இருந்த போதும் அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. MRI பிரிவில் மாத்திரம் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகள் செய்வதற்கான வசதிகள் இருந்த போதும் 400 தொடக்கம் 500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்ற போதும் நோய்த்தொற்று அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காட்டுவதற்காக இவ்வாறான பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
உலகில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகள் பரிசோதனை நடவடிக்கைகளை நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் இலங்கை தலைகீழாக செயல்பட்டு பரிசோதனை நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு வருகிறது. இந்த அபாயமான நடவடிக்கை காரணமாக நாட்டு மக்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வரலாம். இதனாலேயே நடு வீதிகளில் விழுந்து சாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீழே தம்புள்ளை பிரதேசத்தில் வீதியில் விழுந்து மரணித்த இராணுவ வீரரின் புகைப்படம் தரப்பட்டுள்ளது.
---------------------------
by (2020-05-05 00:25:49)
Leave a Reply