(லங்கா ஈ நியூஸ் 2020 மே 07 பிற்பகல் 10.45) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் ஒன்பதாவது மரணம் பதிவாகி உள்ளது என கடந்த 5ஆம் திகதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த கொழும்பு 15 மோதர பிரதேசத்திலுள்ள பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமது அறிவிப்பை பிழை என ஏற்றுக் கொள்வதற்கும் அந்த பிழையை சரி செய்து கொள்வதற்கும் அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை என லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.
58 வயதான மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தான் உயிர் இழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது மே மாதம் மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 48ம் இலக்க வாட்டில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்தாம் திகதி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என PCR பரிசோதனை செய்ய அவருடைய மாதிரி கொழும்பு பல்கலைக்கழக ்ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வரின் மாதிரிகளும் கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த PCR பரிசோதனையின் முடிவில் அன்றைய தினமே அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பரிசோதனை ஆய்வு கூடம் அறிவித்தது. இதனை அடுத்து குழப்பமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் உடனடியாக குறித்த பெண்ணை அங்கொட தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்றைய தினமே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் கொரோனா மரணம் தொடர்பான சர்வதேச பரிந்துரைகளின் படி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை குறித்த பெண்ணின் மாதிரி ஒன்று PCR பரிசோதனைக்காக அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் பெறப்பட்டு அங்குள்ள ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் இதனை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் குறித்த பெண்ணிடம் மாதிரி பெறப்பட்டு கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு (MRI) அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் போதும் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வரின் மாதிரிகள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வைத்திய பரிசோதனை ஆய்வு கூடம் ஆகியவற்றில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கும் கொரோனா என செய்தி வெளியானதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையிலா ஒருவகை குழப்பம் நிலவி வருகின்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவலை மீளப் பெற்றுக் கொண்டு பிழையை சரி செய்ய இன்னும் முன்வரவில்லை.
சுகாதார அமைச்சுக்கு வெளியில் பல்கலைக்கழக ஆய்வு கூடங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பிழையான ஆய்வுகள் காரணமாக சுகாதார அதிகாரிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 13 ஆய்வு முடிவுகள் கொரோனா பொசிட்டிவ் என வழங்கியுள்ளதாகவும் இந்த மாதிரிகள் அனைத்தும் சுகாதார வைத்திய பரிசோதனை ஆய்வுக்கடத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) மூலமாக வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை ஆய்வு பிழையாானதன் காரணமாக பாரிய பிரச்சினை ஏற்பட்டது. பேலியகொடை மீன் விற்பனை சந்தையில் கொரோனா சந்தேகம் ஏற்பட்டு சுமார் 553 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரது மாதிரியும் சுகாதார பரிசோதனை நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வு பிழை என தெரிய வந்தது.
இவ்வாறு நாட்டிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் ஆய்வு கூடங்களில் வழங்கப்பட்ட பரிசோதனை ஆய்வு பிழையான போதும் சுகாதார அமைச்சின் கீழ் இருக்கும் வைத்திய பரிசோதனை நிறுவனம் மற்றும் ஐடிஎச் வைத்தியசாலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை ஆய்வுகள் எதுவும் தவறானதாக இருக்கவில்லை. இது இவ்வாறு இருக்கையில் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பரிசோதனை நிறுவனங்களை மேம்படுத்தாமல் வெளியிடங்களுக்கு பரிசோதனை மாதிரிகளை அனுப்புவது யாருடைய தேவைக்காக என்ற கேள்வி எழுகிறது.
---------------------------
by (2020-05-08 10:18:12)
Leave a Reply