(லங்கா ஈ நியூஸ் 2020 மே 10 பிற்பகல் 04.00) நாட்டை திறப்பதற்கு நாம் இப்போது கரோனா வைரஸை ஒழித்து விட்டோமா?
பதில் தெளிவானது... மே மாதம் 9 ஆம் திகதி இரவு 12 மணிக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பீட்டுத் தகவல்களை அவதானிக்கவும்.
வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நாம் இன்னும் கொரோனா வைரஸுக்கு முகம் கொடுக்கவில்லை. மறைந்து இருந்தது மாத்திரமே. அதனால்தான் நோய் தொற்றாளர்கள் மற்றும் நோய்த் தொற்றினால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது.
கடந்த மார்ச் 11ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பின்னர் நாம் ஒழிந்து கொண்டோம். ஒழிந்திருந்த நாம் என்ன செய்தோம்? எதிரியை தாக்கி தோல்வியடையச் செய்ய மோதலுக்கு முகம் கொடுக்க நாம் ஆயுதம் மற்றும் ஆள் பலத்தை கூட்டினோமா? சரியான திட்டம் தீட்டினோமா?
அதிகாரம் கொண்ட (அனைவரும் அல்ல) பிரிவினர் இரண்டு பக்க பிரிந்து தேர்தலை பிடித்துக் கொண்டு கயிறு இழுக்கத் தொடங்கினர். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக வியாக்கியானங்களை முன்வைத்த போதும் அது உண்மை இல்லை. ஆனால் உயர் மட்ட தலைவர்கள் புத்தி ஜீவிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருடன் அரச, தனியார் ஊழியர்கள் மற்றும் விவசாய பிரிவினரின் ஆகியோரின் உயர்ந்த அர்ப்பணிப்பின் காரணமாக தற்போது நாடு ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று வைரஸிற்கு முகம் கொடுக்கும் அளவிற்கு எம்மிடம் எதுவித ஆயுதங்களும் இல்லை. என்ன இந்த ஆயுதம்? நான் மீண்டும் சுருக்கமாக கூறுகிறேன். காரணம் இதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது சிறந்தது.
01.நோய் தடுப்பு ஊசி. அப்போது எமக்கு மிள் சக்தி கிடைக்கும்.
02.நோய் குணப்படுத்தும் மருந்து.
03.வைரஸின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரையான தகவல்கள். இதன் மூலம் அதன் பலவீனங்களை அறிந்து ஒழித்துக் கட்ட முடியும்.
04. நோயை அறியக் கூடிய மிகவும் சரியான பரிசோதனை. அதன் பின்னர் அதனுடைய தரம் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.
05. மேற்கொள்ளும் பரிசோதனை விரைவில் சரியான பிரதி பலன்களை தரக் கூடியதாக இருக்க வேண்டும்.
06. "வைரஸ் பரவாமல் இருப்பதற்கு நாம் உதவியாக இருப்போம் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் உருவாக வேண்டும். ஆனால் தற்போது போலீசாரிடம் இருந்து தப்பித்துக் கொள்வது" என்ற எண்ணமே உள்ளது.
07. வைத்தியசாலை சிகிச்சை பிரிவில் வசதிகளை மேம்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்வது.
08. PPE எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் அதாவது முக கவசம், ஆடை, கண்ணாடி, பூட்ஸ் பாதணி போன்றவை தேவையான அளவு சேவையாளர்களுக்கு கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
09. எதிரியை அழிப்பதற்கு முறையான திட்டம் தீட்டப்பட வேண்டும்.
10. காலத்துடன் சேர்த்து நோயை எளிதாக எடைபோட்டு Herd immunity என்ற நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதுதான் உண்மையான நிலை.
ஆனால் இன்று எமது நிலை மார்ச் 11 ஆம் திகதியை விட மிக மோசமானது என்பதுடன் ஆனால் தெரிந்தோ தெரியாமலோ வைரஸை அழித்ததாக சில புத்திஜீவிகள் கூறுவதை காண முடிகிறது. உண்மையில் நாம் ஒழிந்தே இருந்தோம். அதே நிலைமையில் தற்போது வெளியில் இறங்கப் போகிறோம். இன்று என்ன மாற்றம்? நாம் மேலே கூறிய ஆயுதங்கள் அனைத்தும் எமக்குக் கிடைத்து விட்டதா?
ஆயுதம் இல்லாமல் அப்பாவிகளை வெளியில் அனுப்பினால் (யுத்தத்திற்கு அனுப்பினால் என்று கூறுவதே சரி) எதனை எதிர்பார்க்க முடியும்? ஒன்றும் தெரியாத அப்பாவிகளை பலி கொடுப்பதாகத் தானே அமையும்? வேறு பிரதிபலன்கள் உள்ளதா? இருந்தால் யாராவது கூறலாம். நாட்டின் பொருளாதாரம் குறித்து எதுவும் இங்கு பொருந்தாது. பொருளாதாரம் என்பது வாழ்வாதாரத்தை நடத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. பார்க்கும் இடமெல்லாம் நோயாளர்கள் நிறைந்து அழிவடையும் பாரிய நகரத்திற்கு பொருளாதாரம் முக்கியமா? அப்போது நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். நாடு எத்தியோப்பியாவாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார முன்னேற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது அல்லவா? எமக்கு விருப்பமானவர்கள் எமது பிள்ளைகள் ஆகியோரை இழந்துவிட்டு நாம் பொருளாதாரத்தை பாதுகாக்க நினைப்பதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? உயிர்களையும் காப்பாற்றிக் கொண்டு எத்தியோப்பியா இன்று நம்மை விட அபிவிருத்தி நோக்கி செல்கிறது அல்லவா? கொரோனா மின்சாரம் போன்று அதிகரிக்க தொடங்கியவுடன் பொருளாதாரம் மேல் செல்லும் என யாரேனும் நினைத்தால்? நாட்டின் ஏனைய நோய்கள் மரணங்கள் குறையும் என நினைத்தால்? நாம் சீனாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். சரியான காலம் வரும் வரை பொறுத்திருப்போம். அதன் பின்னர் வெளியில் செல்ல முடியும். நம்முடைய மொழியில் தெளிவாக சொல்வதானால் 6, 7 மாதங்களுக்குள் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை ஈன்றெடுக்க முடியாது. இந்த முயற்சியும் இயற்கை நீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
நாமும் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்வோம். ஆனால் முதலில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வோம். சீனாவை போன்று சரியான காலம் வரும் வரை காத்திருப்போம். பொறுமையாக இருப்போம். இல்லையேல் நாட்டை திறந்தாலும் சட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் மரண பயத்தில் வெளியில் இறங்கி எமக்கு சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா? சீனாவின் வுகான் நகரத்தை போன்று சிறிது காலம் பொறுமையாக இருந்து வெளியில் இறங்கினால் அங்குதான் நிச்சயமான சுதந்திரம் உண்டு.
இவ்வாறான கருத்துக்கள் சிலருக்கு பிழையானதாக தோன்றக் கூடும். இதுதான் உலகின் நியதி.
பிரசவம் மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர்
---------------------------
by (2020-05-11 01:54:53)
Leave a Reply